தமிழ்ப்புத்தாண்டு உங்கள் ராசிக்கு அற்புதமான பலன்களை வழங்க உள்ளது. சனிபகவான் ஏழரை ஆண்டுகளுக்கு பிறகு புது தைரியம் தெம்பு தரவிருக்கிறது .
ஜோதிட சாஸ்த்திரத்திலே மிக முக்கிய கோளாக கருதப்படுகின்ற சனிபகவான் 3-ம் இடமான உபஜெய ஸ்தானத்துக்கு சென்று நற்பலன்களை வழங்குகிறார்.
கடன்சுமைகள் குறையும் நீண்ட வருடங்களாக கொடுத்து வராமல் இருந்த பணம் திடீர் என கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும்.தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தொழில் போட்டிகள் குறையும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் கூட்டு தொழில்கள் லாபகரமாக அமையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.பகைவர்கள் நண்பர்கள் ஆவார்கள் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும். ஐந்தாம் வீட்டில் இருந்த குருபகவான் மே மாதத்தில் வரக்கூடிய குருபெயர்ச்சியில் 6-ம் இடமான ருண ஸ்தானதனதுக்கு செல்வதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்று தேவை இல்லாமல் கடன்கள் வாங்கூடாது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். 3ம் இடத்தில் இருந்து மேமாதம் வரை ராகுபகவான் நற்பல்களை வழங்குவார் பிறகு 2ம் இடத்துக்கு பின்னோக்கி வருகிறார்.
வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.வேலை சுமை காரணமாக வேலையை விடும் சூழல்கூட உருவாகும் அவரசம் கூடாது வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நண்பர்களும் எச்சரிக்கையாக இருக்கவும். உணவு வழக்கத்தில் கவனம் தேவை துரித உணவுகளை தவித்து இயற்க்கை உணவுகளை உட்கொண்டு உடல் நலனில் கவனம் கொள்ளவும் அடிக்கடி வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.
கேது 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்துக்கு வருவதால் மனக்குழப்பங்கள் காணப்படும்.
வேலைக்கு செல்லும் எண்ங்கள் வராது சோம்பல் அதிகரிக்கும் ஞாபக மறதி அதிகமாக காணப்படும் அடிக்கடி ஆன்மீக பயணங்கள் கோயில் குளம் என சுற்றுவதால் சுப செலவுகள் உண்டாகும். இவ்வருடம் மூன்று கோள்கள் பலன்களை வழங்கவில்லை என்றாலும் சனிபகவான் ஒருவர் உங்கள் ராசியை தூக்கி நிறுத்தும் என்பதில் ஐய்யமில்லை. தைியமாக இந்த வருடத்தை எதிர்கொள்ளலாம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் அல்லது யோக நரசிம்மர் வழிபாடு செய்து வாருங்கள். நேரம் கிடைத்தால் பௌர்ணமி திதியில் திருப்பதி சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.