ஏழரைச்சனி ஜென்ம சனி ராகு கேதுவால் பலன் இல்லை குருவால் பலனில்லை என பல ஊடகங்களிலும் உங்கள் ராசியை பற்றி தாறுமாறாக பலன்கள் வெளி வருவதால் மன குழப்பத்தில் இருக்கிறீர்கள் ஏற்கனவே மன உளைச்சலும் சங்கடங்களிலும் தவித்து வந்த நமது ராசிக்கு. வரக்கூடிய காலங்களில் என்ன ஆகுமோ என்ற கவலை மனதுக்குள் குடி கொண்டிருக்கும்.
வருட கோள்களில் மிக முக்கியமான நான்கு கோள்கள் குரு பகவான் சனி பகவான் மற்றும் ராகு கேது இந்த நான்கு கோள்களை வைத்து வருட பலன்கள் கணிக்கப்படுகிறது மாத பலன் என்பது மாத கோள்களும் வருட கோள்களும் சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள் ஆகும் தினசரி ராசி பலன் என்பது சந்திரனை மையப்படுத்தி சொல்லக்கூடிய பலன்கள் ஆகும்.
சனிபகவான் ஜென்மத்துக்குள் இருந்து சில தொல்லைகளை தந்தாலும் சுப விரைய செலவுகளால் மன அமைதி கிடைக்கும். யாரிடமும் வம்பு வைத்து கொள்ளாதீர்கள் பண விவகாரங்களில் கவனம் தேவை.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம். மூன்றாம் இடத்தில் இடத்தில் இருந்து வரக்கூடிய மே மாத குரு பெயர்ச்சியில் 4-ம் இடத்திற்கு செல்கிறார் இந்த வருடம் குரு பகவதால் பெரிய நன்மைகளை வழங்க விடாவிட்டாலும் பெரிதாக பாதிப்புகளை தர மாட்டார்கள் ஏன் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் தேவையில்லாமல் கடன் சுமைகளுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம் கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்களும் கருத்து வேறுபாடுகளும் வரக்கூடும் கவனம்.
ராசிக்குள் இருந்த ராகு பகவான் வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சி பலன்களில் 12 ஆம் இடம் செல்கிறார் இதனால் சில விரயங்கள் உண்டாகும் வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் பங்குச்சந்தை டிரேடிங் ஆன்லைன் வியாபாரத்தில் மிகுந்த கவனம் தேவை பண இழப்புகள் வரக்கூடும் .
எந்த கோள்கள் பலன்கள் தராவிட்டாலும் வரக்கூடிய மே மாதம் ராகு+ கேது பெயர்ச்சியில் கேது ராசிக்கு 6-ம் இடமான உப ஜெய ஸ்தானத்துக்கு வருவதால் மேற் சொன்ன தீய பலன்கள் எதையும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வார் ஒரு கோள் தீய பலனை தந்தாலும் ஏதாவது ஒரு கோள் நற்பலனை கண்டிப்பாக வழங்குவார் அவ்வகையில் கேது இவ்வாண்டு நன்மைகளை வழங்குவார் .
மனதில் தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும் காரிய தடைகள் விலகும் வெற்றி வசப்படும்.
பரிகாரம்!
சனிக்கிழமைகளில் சனிபகவான் வழிபாடும் பெருமாளுக்கு அர்ச்சனையும் செய்து வாருங்கள். இயலாதவர்களுக்கு உணவு வழங்குங்கள் கால்நடைகளுக்கு தீவனம் தாருங்கள் நல்லதே நடக்கும்.