இந்த ஏப்ரல் மாதம் சுக்கிரன் 12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் நன்மைகள் பல செய்வார் கணவன் மனைவி உறவு பலப்படும் புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு சிலருக்கு புது வீடு கட்டும் எண்ணங்கள் உதிக்கும் எளிதில் வங்கிக்கடன் கிடைக்கும். உறவினர்கள் உதவி செய்வார்கள்.
ராசிக்கு 12-ஆம் இடத்தில் புதன் இருப்பதால் சோம்பல் அதிகமாக காணப்படும் வீண் விரைய செலவுகள் உண்டாகும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் அவசர முடிவுகளை தவிர்க்கும் இம்மாதம் சூரியனும் பலவீனமாக 12 மற்றும் ஒன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசாங்க பகைகள் வரக்கூடும் முன் கோபத்தை தவிர்க்கவும் யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள் வீடு மனை நிலங்கள் வாங்கும் பொழுது பத்திரப்பதிவுகளை சரி பார்த்து வாங்குங்கள்.
இம்மாதம் செவ்வாயும் 4-ம் இடத்தில் பலவீனம் அடைவதால் சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும் தொழிலில் போட்டிகள் இருக்கும் புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் தேவையில்லாத வம்பு வழக்குகள் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
நண்பர்களே வருட பலன்கள் என்பது முக்கியமாக இருக்கக்கூடிய வருட கோள்களை வைத்து சொல்லக்கூடிய பலன்கள் ஆகும்.
அவ்வகையில் இந்த விசுவாவசு ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும் மேமாதம் வரை குருபகவான் இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் அமர்ந்து திருமண யோகம் குழந்தை பாக்கியம் மற்றும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்திவைப்பார்.
பிறகு 3ம் இடத்திற்க்கு சென்றாலும் பாதிப்புகளை வழங்க மாட்டார் நற்பலன்கள் குரு பெயர்ச்சியிலும் வாரி வழங்குவார்.
சனிபகவான் ராசிக்கு 12 ஆம் இடமான விரய ஸ்தானத்துக்கு வந்தாலும் வீட்டில் சுப விரயங்களை செய்வதால் அசுப விரயங்கள் தவிர்க்கப்படும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் மட்டும் செலுத்துங்கள் யாருக்கும் ஜாமீன் எழுத்துக்கள் போடாதீர்கள்.
ராகு மே மாதம் வரை 12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலும் பிறகு 11ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு பின்னோக்கி செல்வதால் ராகுவால் பல நன்மைகளை காண முடியும் திடீர் அதிர்ஷ்டங்கள் திடீர் பணவரவுகள் உண்டாகும் ஓய்வூதிய பணங்கள் கைக்கு கிடைக்கும் பணத்தேவைகள் பூர்த்தியாகும் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் ஷேர் மார்கெட் ட்ரேடிங் லாபத்தை தரும். கடன்கள் சிறுக சிறுக அடைபடும் நிம்மதியான வாழ்வை தரும்.
மே மாதம் கேது 6-ம் இடத்தில் இருந்து நல்லது செய்வார் பிறகு 5-ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு வருவதால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் பிள்ளைகளுடன் கனிவாக நடந்து கொள்ளுங்கள் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் ஆன்மீகப் பயணங்கள் ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும் தெய்வ வழிபாடுகள் மன நிம்மதியை தரும் குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.
இம்மாத சந்திராஷ்டமம் ஏப்ரல் 16,17,18.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் வாராஹி அம்மன் வழிபாடும். அமாவாசை அல்லது பௌர்ணமி திதியன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.