பொதுவாகவே மிதுனராசிக்காரர்கள் சாந்த குணம் படைத்தவர்கள் எடுத்த காரியத்தில் வெற்றியை குவிப்பார்கள் இந்த தமிழ்ப்புத்தாண்டு நன்மைகளை தரக்கூடிய ஆண்டாக விளங்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும் கடந்த ஆண்டில் அனுபவித்த கஷ்டங்களுக்கு விடை கிடைக்கும்.
ராசிக்கு 9ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் புதிய தொழில் முதலீடுகள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும்
வியாபார யுக்திகளை கையாண்டு லாபம் பன்மடங்கு உயரும் பங்காளிகளுக்குள் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலும். பணத்தேவைகள் பூர்த்தியாகும் கொடுத்த பணம் வசூல் ஆகும்.
ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்த குருபகவான் மேமாதம் ராசிக்குள் வருகிறார் ஆடம்பர செலவுகளை தவிற்க்கவும் தேவையில்லாத பொருட்கள் வாங்க வேண்டாம்
கடன் சுமைகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்காதீர்கள் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் உறவினர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள். ராசிக்கு 4-ம் இடத்தில் கேது பகவான் அமர்ந்திருந்தாலும் மே மாதம் வரக்கூடிய ராகு +கேது பெயர்ச்சி பலன்களில் கேது பகவான் மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்துக்கு வருவதால் தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
வெளிநாடு சென்று படிக்கவும் அங்கு வேலை கிடைக்கவும் வாய்புகள் உண்டும்.
மே மாதம் 18ம் தேதிவரை 10-ம் இடத்தில் இருந்து ராகுபகவான் நன்மைகளை வழங்குவார். பிறகு 9-ம் இடத்துக்கு பின்நோக்கி செல்வார் இதனால் தந்தை மகனுக்குள் கருத்து மோதல்கள் உருவாகும் பூர்வீக சொத்து பிரச்சனைகள் உண்டாகும் வேலை விஷயமாக குடும்பத்தை பிரிந்து வெளியூர் வெளிநாடுகளில் தங்கும் சூழல் உருவாரும் வருமானம் நன்றாக இருந்தாலும் வரவுக்கேற்ப செலவுகளும் உண்டு.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் நவகிரக புதன்வழிபாடும் நரசிம்மர் வழிபாடும் செய்து வாருங்கள். நேரம் கிடைத்தால் ஆயில்யம்.கேட்டை.ரேவதி நட்சத்திரநாளில் திருவெண்காடு புதன் ஸ்தலத்துக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.