மாத ராசிபலன்கள் என்பது மாத கோள்களையும் வருட கோள்களையும் இணைத்து சொல்லக்கூடிய பலன்கள் ஆகும். வருடபலன்கள் புத்தாண்டு பலன்கள் வருட கோள்களை வைத்து சொல்லக்கூடிய பலன்கள் ஆகும்.
ஏப்ரல்மாத ராசி பலன்கள்களில் புதன் பலம் பெற்று 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் எடுத்த காரியம் யாவும் வெற்றியை தேடி தரும் பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும் கூட்டுத் தொழில்கள் மூலமாக நல்ல வருமானத்தை பெற முடியும். நண்பர்கள் முன்நின்று உதவி செய்வார்கள்.
இம்மாதம் சுக்கிரனும் பலம் பெற்று 11ம் வீடான உச்ச வீட்டில் அமர்ந்திருப்பதால் தன வரவுகள் நன்றாக இருக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் எதிர்பாராத பணம் கை கிடைக்கும் கடன் சுமைகள் குறையும் கணவன் மனைவி உறவு பலப்படும் உறவினர் மூலமாக நல்ல செய்தி கிடைக்கும் புதிய வாகன யோகமும் சிலருக்கு புது வீடு கட்டும் யோகம் உண்டு.வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
இம்மாதம் செவ்வாயும் பலம் பெற்று 3-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் தொழில் போட்டிகள் குறையும் போட்டி தேர்வுகள் வெற்றி பெறுவீர்கள் புதிய வியாபார யுக்திகளை கையாளுவீர்கள் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள் இளைய சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். புதிய நட்பும் மலரும்.
இம்மாதம் 14ம் தேதி வரை சூரியனும் பலம் பெற்று 11-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசாங்கம் ஆதாயம் கிடைக்கும் அரசியல் செல்வாக்கு கூடும் பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
தமிழ்ப்புத்தாண்டு விசுவாவசு ஆண்டில் ராசிக்குள் இருந்த குருபகவான் மேமாதம் குருபெயர்ச்சியில் 2-ம் இடமான தன ஸ்தானத்துக்கு செல்வதால் குடும்பத்தில் திருமண சுபநிகழ்வுகள் நடக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்பைத்தரும் பண சேர்க்கை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
சனிபகவான் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் இருப்பதால் வெளிநாடு யோகம் வேலை வாய்புகள் உருவாகும்.
சொத்து பிரச்சனைகள் தீரும்.
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள் பங்காளிகளுக்குள் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் அகலும் .வழக்குகள் வாபஸ் ஆகும்
அல்லது சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
ராகு 11-ம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்கி வருகிறார் மே மாதம் வரக்கூடிய ராகு+கேது பெயர்ச்சியிலும் ராகு 10ம் இடத்துக்கு பின்னோக்கி சென்றாலும் நற் பலன்களை வழங்குவார் நோய் நொடிகள் அகலும் மருத்துவ செலவுகள் கட்டுக்குள் வரும் .
ஓய்வூதிய பணம் இன்சூரன்ஸ் முதிர்ச்சி அடைந்த தொகை திடீர் என கைக்கு கிடைக்கும் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.
கேது பலவீனமாக காணப்படுவதால் மனக்குழப்பம் காண்படும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள். ஆன்மீக பயணங்கள் சுப விரைய செலவுகள் உண்டாகும்.
ஏப்ரல் 18.19,20, சந்திராஷ்டமம்.
பரிகாரம்;
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து வாருங்கள். பௌர்ணமி திதியில் திருப்பதி சென்று வருவதும் சிறப்பு செல்வம் செழிக்கும் மனம் அமைதி பெறும். நல்லதே நடக்கும்.