மே மாதம் வரை குரு பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்தாலும் வரக்கூடிய குரு பெயர்சியில் 11ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு வருகிறார் அடுத்து வரக்கூடிய ஒரு ஆண்டு காலம் உங்கள் ராசிக்கு நற்பலன்களை வாரி வழங்குவார் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும் புதிய தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள் கணவன் மனைவி உறவு பலப்படும் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும் தடைபட்ட திருமணங்கள் தடையின்றி அமையும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் பிள்ளைகளால் ஆதாயமும் நன்மைகளும் உண்டாகும் உறவினர் மூலமாக நற்செய்தி கிடைக்கும் புதிய வாகன யோகமும் சிலருக்கு புது வீடு கட்டும் அமைப்பும் உண்டு.
கண்டக ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்திற்கு செல்வதால் சனி கெடுத்தாலும் சனியால் கெடுக்கப்படுவதை குருவால் கொடுக்கப்படும் குரு பகவான் யோக நிலை வழங்கும் பொழுது சனியோட தாக்குதல் பெரிய அளவில் இருக்காது அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டானது உங்கள் ராசிக்கு சிறப்பான பலன்களை வாரி வழங்கும் என்பதில் ஐயமில்லை குடும்பத்தில் சுப விரைய செலவுகள் செய்வதால் அசுப விரையங்கள் தவிர்க்கப்படும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவரங்களில் மிகுந்த கவனத்தை செலுத்துங்கள்.
மே மாதம் வரக்கூடிய ராகு+கேது பெயர்ச்சியில் ராசிக்கு 2-ம் இடத்திலிருந்து கேது ராசிக்குள்ளும் 8-ம் இடத்தில் இருந்த ராகுபகவான் 7-ம் இடத்திற்கும் பின்னோக்கி வருவதால் மன குழப்பங்கள் காணப்படும் அவசர முடிவுகளை தவிருங்கள் எடுத்தோமா கவிழ்த்தோமோ என்று இல்லாமல் ஒன்றுக்கு இருமுறை ஆலோசனை செய்து எந்த விஷயத்திலும் முழுமையாக ஈடுபடுங்கள் யாரையும் தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாதீர்கள் முன் கோபத்தை அறவே தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக ராகு +கேது வழிபாடும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தால் தீபமேற்றி அர்ச்சனையும் செய்து வாருங்கள் பௌர்ணமி அல்லது அமாவாசை திதி அன்று குலதெய்வம் கோயிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.