மே மாதம் வரை குருபகவான் சற்று பலம் இழந்து 6-ம் இடத்தில் காணப்பட்டாலும் இந்த குரு பெயர்ச்சியில் 7ம் இடத்துக்கு செல்வதால் தனவரவுகள் நன்றாக இருக்கும் தொழில் வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் மஹாலட்சுமியின் அருள் ஆசிகள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் .
சனிபகவான் 4ம் இடமான அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் இருந்து தீமைகளை தந்தாலும் குருபகவான் 7ம் இடத்தில் இருந்து அதை தடுப்பார்.
சனி கெடுப்பதை குரு தடுப்பார்.
அதனால் இந்த தமிழ்ப்புத்தாண்டு உங்கள் ராசிக்கு பெரிய பாதிப்புகள் இருக்காது என்பதே உண்மை.
சனிபகவான் 4ம் வீட்டில் சஞசரிப்பதால் தாயாரின் உடல் நலத்தில் கவனத்தை செலுத்துங்கள் வீடு மனை நிலங்கள் வாங்கும் பொழுது பத்திர பதிவுகளில் கவனத்தை செலுத்துங்கள் முறையான ஆவணங்கள் சரிபார்த்து வாங்கவும் .
3-ம் வீட்டில் சனிபகவான் கொடுத்த நற்பலன்களை ராகு+கேது பெயர்ச்சியில் ராகு 4-ம் வீட்டில் இருந்து மூன்றாம் வீடான கும்பத்துக்கு பின்னோக்கி வருவதால் நன்மைகள் பல காணலாம் எதிர்பாரத பணம் திடீர் என கைக்கு கிடைத்து பண தேவைகளை பூர்த்தி செய்யும். மருத்துவ விரைய செலவுகள் குறையும் உடல் ஆரோகியம் தேக ஆரோகியம் மேம்படும.
்
பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.வெளிநாடுகளில் சென்று கல்வி பயில மற்றும் வெளிநாடுகளில் பணி புரிய விரும்பும் நண்பர்களுக்கு சிறப்பான காலமிது வாய்புகள் தேடி வரும்.
10-ம் இடத்தில் இருந்த கேது 9-ம் இடத்துக்கு பின்னோக்கி செல்வதால் தந்தையுடனான உறவுக்குள் விரிசல்கள் விழும் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.பூர்வீக சொத்துக்கள் விற்பனை ஆகும் பழைய கடன்கள் அடைபடும் புதிய சொத்துக்கள் வாங்க முடியும்.பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனைகள் உண்டாகும் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும் அடிக்கடி கோயில் ஆன்மீக பயணங்கள் மேற்க்கொள்வீர்கள்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்க்கிழமைகளில் நவகிரக சந்திரன் வழிபாடும் அர்ச்சனையும் செய்து வாருங்கள் பௌர்ணமி திதியன்று வீட்டில் மஹாலட்சுமி வழிபாடும் செய்து வாருங்கள் செல்வம் செழிக்கும் நல்லது நடக்கும்.