மே மாதம் வரக்கூடிய குரு பெயர்ச்சி வரை 7-ம் இடத்தில் அமர்ந்த குரு சுப நிகழ்வுகளும் சுப காரியங்களும் நடத்தி வைப்பார் திருமண தடைகள் அகலும் குடும்பத்தில் குழந்தை செல்வங்கள் உருவாகும் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் குரு பெயர்ச்சிக்கு பிறகு ராசிக்கு 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வதால் தேவையில்லாத ஆடம்பர செலவுகளால் பண சேமிப்புகள் கரையும் தொழிலுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் .
சற்று ஆறுதல் நிம்மதியும் என்றால் கேது பகவானால் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும் 11-ம் இடத்தில் அமர்ந்த கேது வரக்கூடிய ராகு+ கேது பெயர்ச்சியிலும் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு நீங்குவதால் புதிய தொழில் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் வெளிநாடு பயணங்கள் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் தேக ஆரோக்கியம் காணப்படும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் எதிர்பாராத பணம் கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் யாவும் நடக்கும்.
இவருடம் சனிபகவான் 5-ம் இடத்தில் காணப்படுவதால் பிள்ளைகளால் விரையங்களும் சற்று மனசங்கடங்கள் உண்டாகும் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் விட்டுக் கொடுத்து செல்லவும் முன் கோபம் பின் விளைவுகளை ஏற்படுத்தும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்துங்கள் சொத்துக்கள் வாங்கும் பொழுது கவனமாக இருங்கள் பத்திர பதிவுகள் சரிபாருங்கள்.
இவ்வருடம் ராகவும் 5 மற்றும் நான்காம் இடங்களில் பலவீனமாக தென்படுவதால் சற்று எச்சரிக்கை அவசியம் புதிய நபர்களிடம் கவனத்துடன் இருங்கள் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலமாக பணம் இழப்புகள் உண்டாகும் பங்குச்சந்தை டிரேடிங் போன்ற ஆன்லைன் வியாபாரங்கள் நஷ்டத்தை உண்டு பண்ணும் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் வேலைக்கு போகும் நபர்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும் பணிச்சுமை காரணமாக நாம் வேலையை விடும் சூழல் உருவாகும் அப்படி வேலை விட்டால் வேறு வேலை கிடைக்க போராட வேண்டி வரும் கவனம்.
பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் இருக்கும் சிவாலயத்தில் சென்று நவகிரக வழிபாடும் சிவனுக்கு அர்ச்சனையும் செய்து வாருங்கள் பிரதோஷ வழிபாடும் சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.