எனது வீடு தெருக்குத்தில் (தெருக்களின் சந்திப்பில் உள்ள வீடு) உள்ளதாகச் சொல்கிறார்கள். அதைச் சரிசெய்ய ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.
வீட்டு வாயிலில் பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்து அதற்கு நித்திய பூஜைகளைச் சரிவர செய்து வருவதால் எவ்வித தோஷமும் வீடுகளை அண்டுவதில்லை. சேலம், ஈரோடு பகுதிகளில் இவ்வாறான சந்திப்பில் உள்ள வீட்டு வாயிலில் பித்தளை அல்லது இரும்பினால் ஆன திரிசூலத்தை பிரதிஷ்டை செய்து வைத்திருப்பார்கள்.
ஒரு சிலர் வீட்டு வாயிலில் வேப்பமரம் நட்டு வைத்திருப்பார்கள் டைல்சில் செய்த கண்திருஷ்டி வினாயகர் படங்களும் வீட்டு வாயிலில் வைக்கலாம் தெய்வ சாந்நித்யம் நிறைந்திருந்தால் தீயசக்திகள் உட்புகுவதில்லை என்ற நம்பிக்கையே இவ்வாறான செயல்களின் உட்கருத்து.
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வாசல் பெருக்கி, சாணம் கரைத்து தெளித்து கோலமிட்டு வாயிற்படியில் விளக்கேற்றி வைப்பதும், பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வாயிற்படிக்கு மஞ்சள் பூசி, பூஜை செய்து வருவதுமே போதுமானது.
வேறெந்த பரிகாரமும் அவசியமில்லை.