மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். தன விரையங்கள் உண்டாகும்.பணவரவு தாமதப்படும். தேவையின்றி கடன் வாங்குவதும் கொடுப்பதும் கூடாது. உத்யோகத்தில் நற் பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனை வரவேற்கப்படும். அடுத்தவர்கள் மனம் நோகும் படி பேச வேண்டாம்.யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
சுற்று வட்டாரத்தில் பொறுமை அவசியம். உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம்.தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். பிரியமானவர்கள் பாசமழைப் பொழிவர். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.இன்றும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியம்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். வண்டி வாகன யோகம் உண்டு . கணவன் மனைவிக்குள் விவாதம் வந்துப் போகும். உத்யோகத்தில் யாரையும் திருப்திப்படுத்த நினைக்காதீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தின் ஆதரவை பெற முடியும். அடுத்தவருக்கு உதவும் எண்ணம் இருக்கும். தான தரும காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உத்யோத்தில் வேலைச்சுமை குறையும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.முன் கோபத்தை தவிற்க்கவும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்கு வாதங்கள் உருவாகும். மன அமைதிக்காக தியானம் செய்வது நல்லது. சேமிப்பில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான நிலை உருவாகும்.ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்களிடமிருந்து நற்செய்தி கிடைக்கும்.எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். கணவன் மனைவிக்குள் நட்பு மலரும்.வீண் கோபம், மன உளைச்சல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தின் மீது அக்கறையும், பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டு மருத்துவ சிலவுகள் குறையும்.எதிரிகள் அடிபணிந்து போவர். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பதவிகள் தேடி வரும்.தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதார நிலை உயரும். எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவர். புது நட்பு வட்டாரம் உருவாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகள் வழங்காதீர்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. யாரையும் விமர்சித்து பேச வேண்டாம்.மறைமுக எதிர்ப்புகள் வரும் .உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வீண் விரைங்கள் உண்டாகும்.மனம் தெளிவு பெறும்.ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை நீடிக்கும்.