மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, புது நபர்களை அதிகம் நம்ப வேண்டாம். உறவினர்கள் அவசர காலங்களில் உதவி செய்வர். எதிரிகளின் பலமிழந்து நிற்பர். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும் மனம் அமைதி பெறும். குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். மன பலம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே,பண தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் தடைகளின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆலோசானை கைகொடுக்கும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். உயர்வான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளவும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். வெளிவட்டாரத்தில் நிறைய தொடர்புகள் கிடைக்கும். கணவன் மனைவிடையே ஈகோவை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் உயர்வடையும்.இன்றும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்க முடியும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டு. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உருவாகும். தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, பொருளாதார பிரச்சனைகள் குறையும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். முக்கிய காரியங்களில் சின்ன தடை உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, நம்பி வந்தவர்களுக்கு நல்லுதவி செய்ய முடியும். சொத்து விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம். திட்டமிட்ட பயணங்கள் தடைப்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தாருடன் சுமுக உறவு ஏற்படும். மற்றவர்களை நம்பி எந்த காரியமும் செய்ய வேண்டாம். ஆடம்பர செலவுகளை குறைத்துகொள்ளவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்லவும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். வீட்டில் விருந்தினர்கள் வருகை இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.