மேஷம்
ஞாபக மறதி அதிகமாக காணப்படும். இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். திடீர் பண வரவுகள் உண்டாகும்.காரிய அனுகூலம் உண்டாகும். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. உத்யோகத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம்
நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினார்களால் உதவிகள் கிடைக்கும் நண்பர்களால் வீண் டென்ஷன் வந்துப் போகும். திட்டமிடாத செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம்
அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களிடம் சின்ன மனவருத்தம் வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.பண விவகாரங்களில் கவனம் தேவை.தேவையின்றி கடன் வாங்குவதை தவிற்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கடகம்
குடும்ப பொருளாதாரம் ஏறு முகமாக இருக்கும். நினைத்த காரியம் நடக்கும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். வீடு மாற வேண்டிய சூழல் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்
கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற சிரமப்பட வேண்டியிருக்கும்.கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை இருக்கும். நட்பு வட்டாரங்களை குறைக்கவும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும் .
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
கன்னி
யாரையும் அதிகம் நம்பாமல் இருப்பது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். ஜாமீன் கையெழுத்துக்கள் தவிற்க்கவும்.பயணங்களால் களைப்பு இருக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
துலாம்
மன மகிழ்ச்சி காணப்படும்.எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
விருச்சிகம்
குடும்பத்தில் இக்கட்டான சூழல் நிலவும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீண் கோபத்தை குறைப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் வரும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
தனுசு
கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். அண்டை, அயலாருடன் நட்புறவு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் மருத்துவ சிலவுகள் கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்.
மகரம்
பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.தனாவருவாய் நன்றாக இருக்கும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும். பெண்கள் வகையில் சில தொந்தரவுகள் வரும்.வெளி நபர்களிடம் உஷாராக பழகுங்கள். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.
கும்பம்
மற்றவர்களுக்குகாக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும்.நிலுவை பணிகளை நிறைவு செய்வீர்கள்.மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நலம் மேம்படும். புது தொழில், யோகம் அமையும்.
மீனம்
குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மன சுமை அதிகரிக்கும். ஆடம்பர சிலவுகளால் கையிருப்புகள் கரையும்.சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது பெரியோர்கள் ஆசி கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.