மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் அனுசரணை அதிகம் தேவை. முன்கோபத்தை தவிற்க்கவும்.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். அலைச்சல் அதிகமாக காணப்படும்.பயணங்களால் சில பண விரையம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் சகஜ நிலை இருக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். புது விஷயங்களில் ஆர்வம் கூடும். கணவன் மனைவி உறவு பலப்படும் .
பிரியமானவர்கள் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.வியாபார யுக்திகளால் லாபம் பன் மடங்கு உயரும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே,சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் .எதிரிகள் தொல்லை குறையும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட நேரிடும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்ய முடியும். பெற்றோரின் அரவணைப்பு கிட்டும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. மனச்சுமை அதிகரிக்கும். எதிரிகளின் பலம் வெகுவாக குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் அவர்களால் உதவிகளும் கிடைக்கும் ..தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். பொறுப்பான செயல்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். கூடுமானவரை கடன் வாங்குவதை தவிற்க்கவும்.மனதில் இருந்த பிரச்சனைகள் விலகும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். புது நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பர். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.புதிய முதலீடுகளால் ஆதாயம் உண்டு.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப வாழ்வில் சில நெருக்கடிகள் வரலாம். கணவன் மனைவிக்குள் வாக்கு வாதங்கள் உருவாகும்.மூன்றாம் நபர்களால் குடும்பத்தில் சண்டைகள் வரலாம். தியானம் மன நிம்மதியை தரும். தூரத்து பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும்.கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள். இடம் பொருள் ஏவல் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ளவும்.யாரிடமும் பகை வேண்டாம். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, முக்கிய வேலைகள் தாமதமின்றி நிறைவேறும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.எதிர்பார்த்த நபர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் கைக்கூடும். பிரியமானவர்களால் ஆதாயம் உண்டு. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதாரம் நல்ல விதமாக இருக்கும். திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக செய்ய முடியும்.புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.வேலை பளூ அதிகரிக்கும்.வரவுக்கேற்ப சிலவுகளும் உண்டாகும். நண்பர்கள் சில அலைச்சல்கள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.