Breaking News :

Sunday, December 15
.

இன்றைய ராசி பலன்கள் - (12-12-2024 வியாழக் கிழமை)


மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். வண்டி வாகனங்களால் எதிர்பாராத விரையங்கள் ஏற்படும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே,உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். கவலையை மனதில் இருந்து அகற்றவும். மற்றவர்களை நம்பி காரியங்களை ஒப்படைக்க வேண்டாம்.பண விவகாரங்களில் கவனம் தேவை யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப கிடைக்கும். பழைய சொந்த, பந்தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். கொடுத்த பணம் வசூல் ஆகும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்

கடகம்
கடக ராசி நண்பர்களே, எதிர்பார்த்ததிற்கும் மேலான நன்மைகள் கிடைக்கும். நற்செய்தி ஒன்று கிடைக்கும். பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். புது நபர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

சிம்மம்
சிம்ம ராசி நண்பகளே, குடும்ப சிக்கல்கள் குறைய தொடங்கும்.பண சேமிப்பு இருக்கும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில் போட்டிகள் குறையும்.தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி
கன்னி ராசி நண்பர்களே, சுற்றி உள்ளவர்களின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் நாளடைவில் பூர்த்தியாகும். உறவினர்களால் ஒரு சில பிரச்னைகள் வரக்கூடும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.சநதிராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுக்கள் நடக்கும். மன போராட்டங்கள் குறையும். தவிர்க்க முடியாத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப ஆதரவு முழுமையாக கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படவும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு
தனுசு ராசி நண்பர்களே, பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். பால் நண்பர்களை சந்திப்பீர்கள்.தேக ஆரோக்கியமா பலம் பெறும்.மருத்துவ சிலவுகள் கட்டுக்குள் வரும். கோபத்தால் முக்கிய நபர்களின் நட்பை இழக்க நேரிடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப பாரம் அதிகமாகும். பொறுப்புகள் அதிகரிக்கும்.மற்றவர்கள் மெச்சும் படி உங்கள் செயல்கள் இருக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனடியாக முடியும். உத்யோகத்தில் பொறுமை அவசியம்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களை கவனமாக கையாளவும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும் வீண் விவதங்களால் குடும்பத்தில் மன ஸ்தாபங்கள் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.

மீனம்
மீன ராசி நண்பர்களே, அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும்.யாரிடமும் கோபத்தை காட்டார்கள் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.ஆன்மீக எண்ணம் மேலோங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.