மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, பண தேவைகள் பூர்த்தியாகும்.பேச்சில் நிதானமும், விவேகமும் நிறைந்திருக்கும். பல வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.புதிய முதீடுகளால் வியாபார லாபம் காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். கணவன் மனைவி உறவு பலப்படும்.காரிய தடைகள் விலகும்.தேக ஆரோக்கியம் பலம் பெறும். பொருளாதார நிலை உயரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, நெருங்கிய உறவுகளால் நெருக்கடிகள் வரலாம். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. புதிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.இரவு 9 மணிவரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான தருணங்கள் இருக்கும். ஆன்மீக ஆர்வம் கூடும். கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
இரவு 9 மணிமுதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். முடிந்த வரை கடன் வாங்குவதை தவிற்க்கவும்.பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களுடன் சின்ன மனஸ்தாபம் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, அடுத்தவர்களை குறைக் கூறுவதை தவிர்க்கவும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். இழுபறி வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். நண்பர்கள் சிலர் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவர்.கூடா நட்பு கேடாய் விளையும். பிரியமானவர்களின் அன்பும், பாசமும் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, தள்ளிப் போன காரியங்கள் உடனடியாக முடியும். கொடுத்த பணம் வசூல் ஆகும்.தூர பயணங்களை தவிர்க்கவும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரத்தில் லாபம் வரும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப சிக்கல்கள் பாதியாக குறையும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும்.விட்டுச்சென்ற சொந்தம் தேடி வரும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும்.உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப செல்வாக்கு உயரும். வி.ஐ.பிக்களின் அறிமுகம் கிடைக்கும் பணத்தேவைகள் ஓரளவு சீராகும்.சொந்த பந்தங்கள் கை கொடுத்து உதவுவார்கள். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.