மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்ப சிக்கல்கள் வெகுவாக குறையும்.பணப்புழக்கம் காணப்படும்.தேவையானதை வாங்க முடியும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, புதிய முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும்.பெற்றோர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும்.பயணத்தால் ஆதாயம் உண்டு. பொருளாதாரம் ஏற்ற தாழ்வு இல்லாமல் சமமாக இருக்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, புது நபர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். பண விவகாரங்களில் கவனம் தேவை. தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, அந்நியர்களால் பண விரயமும் வீண் அலைச்சலும் ஏற்படும்.உடல் நல குறைபாடுகளும் மருத்துவ சிலவுகள் உண்டாகும். உறவினர்கள் அன்பு பாராட்டுவர். திருமணம் காரியம் கைகூடும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
சநதிராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே,மன அமைதி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். தொந்தரவு தந்தவர்கள் தானாக விலகுவர். கடன் தொல்லைகள் சிறுக சிறுக குறையும்.வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப செல்வாக்கு உயரும். ஆடம்பர சிலவுகளால் சேமிப்புகள் கரையும்.மனதில் எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும்.கணவன் மனைவிக்குள் தேவையற்ற விவாதங்களை தவிற்க்கவும். வாகனம் யோகம் உண்டு. சொந்த தொழில் மேன்மையடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். எப்போதும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, தெய்வ சிந்தனை அதிகரிக்கும்.ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர். பிரபலங்கள் அறிமுகமாவர். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.யாருக்கும் ஜாமீன் தராதீர்கள். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கரம் நீட்டுவர். உதவிகள் கிடைக்கும் தேவைகள் பூர்த்தியாகும்.புதிய வாகன யோகம் உண்டு.தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள் தன வரவு உண்டாகும்.விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். நட்பு வழியில் சில தொந்தரவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். அடுத்தவர் மனசு காயபடும்படி பேச வேண்டாம்.முக்கிய நபரின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில், வியபாரத்தில் நல்ல லாபம் வரும்