மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டிவரும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. தேவையின்றி கடன் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.புதிய வாகனம் யோகம் உண்டு. உத்யோகத்தில் வேலை பளு கூடும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து அகற்றவும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள் குலதெய்வ அருள் கிடைக்கும்.பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, உற்றார், உறவினர் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவர். பணவரவு சுமாராக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. கோயில் பயணங்கள் நிம்மதியை தரும்.உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டம் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள முடியும். கடன் பிரச்சினைகள் குறையத் தொடங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையம்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, மனதிற்கு பிடித்தமான விஷயங்களை மட்டும் செய்யவும். முன் கோபத்தை தவிற்க்கவும்.அவசர முடிவுகளால் பணம் இழக்கும் அபாயம் உள்ளது.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் அனுசரித்து போவது நல்லது. கணவன் மனைவிக்குள் தேவையற்ற புகைச்சல் உண்டாகும்.பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே,பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் பொருள் சேர்க்கை உண்டாகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு.கோயில் தர்ம காரிங்கள் சேவை செய்ய முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.கடன் வாங்குவதை தவிற்க்கவும். வாகனம் பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, வேண்டியவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமான வருமானத்தை தரும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மீக எண்ணம் உதிக்கும்.எதையும் தனியாளாக நின்று செய்ய முடியும். விருந்தினர்கள் வருகை உற்சாகம் தரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். பிரியமானவர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். புதிதாக சொத்து வாங்குவது குறித்து யோசனை வரும். ஆன்மீக பயணங்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.