மேஷம்
மேஷ ராசி நண்கர்களே, புது முயற்சிகள் கைகூடும். நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். குழப்பம் காணப்படும்.வாகனத்தில் செல்லும் பொழுது மெதுவாக செல்லவும். பெற்றோரின் நன்மதிப்பை பெற முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, மனநிறைவு உண்டாகும் முக்கிய காரியங்கள் காலதாமதின்றி நடக்கும். நற் செய்தி ஒன்று கிடைக்கும்.உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். பயணங்களால் உடல் அசதி ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.சந்தோஷமாக காணப்படுவீர்கள் பண தேவைகள் பூர்த்தியாகும். முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கடகம்
கடக ராசி நேயர்களே, குடும்ப பாசம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும் எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். பண விவகாரங்களில் கவனம் செலுத்துங்கள் தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, விலகி நின்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர் ஆதரவு தருவார்கள். பணவரவு திருப்தி அளிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப பெருமை உயரும். நினைத்த காரியம் வெற்றியை தரும்.வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
வெளியூர் பயணங்கள் மேற்க்கொள்வீர்கள் .
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. மனதில் சந்தோஷம் ஏற்படும். பெருமைப்படும் படியான காரியங்கள் நடக்கும்.காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே,துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்வீர்கள்.
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பொருள் ஒன்றை மறந்து தேடவேண்டி வரும்.பழைய பிரச்சனையில் ஒன்று தீரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே,பெயரும் புகழும் கிடைக்கும் பெரிய மனிதர்களின் சந்திப்பு மன நிறைவை தரும்.குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். வேண்டாதவர்கள் சுய ரூபம் புரியவரும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சந்தோஷம் காணப்படும் பண விஷயத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
மீனம்
மீன நண்பர்களே, முக்கிய பணிகளில் ஒன்று முடிவடையும். மனம் நிம்மதி அடையும்.
சுற்றி இருப்பவர்களை அனுசரித்துப் போவது நல்லது. வாகன வசதிகள் பெருகும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.தொழில் வியாபாரத்தில் லாபம் வரும்.