மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,உற்சாகமும் மனமகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனை வரவேற்கப்படும். அடுத்தவர்கள் மனம் நோகும் படி பேச வேண்டாம். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். பண வருவாய் நன்றாக இருக்கும் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்ப உறவுகளிடமும் நண்பர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள் தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். பிரியமானவர்கள் பாசமழைப் பொழிவர். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில் போட்டிகள் குறையும் எதிரிகள் விலகுவார்கள்.தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். நல்ல தகவல் ஒன்று காதில் வந்து விழும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உதிக்கும். கணவன் மனைவிக்குள் விவாதம் வந்துப் போகும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் அதிகமாகும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தின் ஆதரவை பெற முடியும். எதிலும் தீர யோசித்து முடிவு எடுப்பது நல்லது. தாய் தந்தையிடம் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள்.திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உத்யோத்தில் வேலைச்சுமை குறையும்.தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். முன் கோபத்தை தவிற்க்கவும். மன அமைதிக்காக தியானம் செய்வது நல்லது.ஆன்மீக பயணங்கள் மேற் கொள்வதால் மன அமைதி கிடைக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான நிலை உருவாகும். எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும். பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். பூர்வீக நில பிரச்சனைகள் தீரும்.வீண் கோபம், மன உளைச்சல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.யார் மனதையும் புண்படுத்துவது போல் பேசதீர்கள். எதிர்ப்புகள் தன்னால் அடங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தின் மீது அக்கறையும், பாசமும் அதிகரிக்கும். எதிரிகள் அடிபணிந்து போவர். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த பகைகள் அகலும்.மருத்துவ விரையங்கள் குறையும்.தேக ஆரோக்கியம் பலம் பெறும். உத்யோகத்தில் பதவிகள் தேடி வரும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே,போலி வாக்குறுதிகளை நம்பாதீர். பொருளாதார நிலை சீராக இருக்கும். எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவர். பண வருவாய் நன்றாக இருக்கும் .புது நட்பு வட்டாரம் உருவாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, புண்ணிய ஸ்தலங்கள் செல்லும் பாக்கியம் கிட்டும். குலதெய்வ அருள் கிட்டும்.மனம் சுமை அதிகரிக்கும்.யாரையும் அதிகமாக நம்ப வேண்டாம். புது முயற்சிகளை தள்ளி வைக்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும் காலை 10:20 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது.
மீனம்
மீன ராசி நண்பர்களே, மனதிற்கு பிடிக்காத விஷயங்களை செய்ய வேண்டாம். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். குடும்ப ரகசியங்களை வெளிநபர்களிடம் வெளியிட வேண்டாம்.உத்யோகத்தில் நற்பெயர் கிடைக்கும்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.காலை 10:20 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமும் நிதானமும் அவசியம்.