மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும்.கணவன் மனைவிக்குள் வாக்கு வாதங்கள் தோன்றி சண்டைகளாக மாறும். மன சஞ்சலங்கள் ஏற்பட்டு பின் விலகும். முன் கோபத்தை தவிற்க்கவும். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, மன அமைதி கிடைக்கும்.குடும்ப பிரச்னையை எதிர்கொள்ள முடியும். தேவையில்லாத விவகாரங்களில் தலையிடாதீர்கள் பண நெருக்கடி இருக்கும். புதிய முயற்சிக்கு பலன் கிடைக்கும். உத்யோகத்தில் பாராட்டு மழை உண்டு தொழில் வியாபாரங்கள் மிதமான வருமானத்தை தரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, விரும்பிய காரித்தை விரும்பியபடியே செய்ய முடியும். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும். கணவன் மனைவி உறவில் குதூகலம் ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும். பழைய நண்பரை சந்திப்பீர்கள் பணம் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தியானம் மன நிம்மதியை தரும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். முக்கிய விசேஷங்களில் கலந்து கொள்ள முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, எதிர்காலம் பற்றிய பயம் இருக்கும். பொறுப்பான செயல்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும் புதிய முதலீடுகளால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் வீண் விவதங்கள் தவிற்பது நல்லது பிரியமானவர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பம் வளர்ச்சி பாதையில் செல்லும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை.
பெண்கள் வழியில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். பண விவகாரங்களில் கவனம் தேவை.பொதுவாழ்வில் பொறுப்புகள் கூடும். வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். உத்யோகத்தில் உயர் பதவி தேடி வரும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப பெரியவர்களை அனுசரித்துச் போகவும். நிதி நிலைமை சீராகும். திட்டமிட்ட காரியமொன்றை மாற்றியமைக்க முடியும். அலைச்சல் அதிகமாக காணப்படும்.தொழில், வியாபாரம் நல்ல முறையில் செல்லும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. பண பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும். மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும் தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, உற்றார், உறவினர்கள் அனுசரணையாக நடந்துகொள்வர். கணவன் மனைவிக்குள் புகைச்சல் உருவாகும்.எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.