மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, நினைத்தது நடக்கும்.எதிலும் பொறுமையாக இருந்து சாதிக்கவும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.உடல் நலனில் கவனம் தேவை . உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை நீடிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். கொடுத்த பணம் வசூல் ஆகும் நினைத்த காரியம் நிறைவேறும்.சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். நண்பர்கள் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. உத்யோக மாற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும்.கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மறைமுக எதிரி தொல்லை நீங்கும். நண்பர்கள் அவசர காலங்களில் உதவுவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும். யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, மனதில் உயர்வான எண்ணங்கள் இருக்கும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். வாழ்க்கைதுணையின் செயல்கள் மகிழ்ச்சியை தரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியிபாரங்கள்
லாபகரமாக ஆமையும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்ர்களே, வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். முக்கிய வேலைகளை தனியாளாக நின்று கவனிக்க முடியும் அலைச்சல் அதிகமாக காணப்படும். உடல் நல குறைபாடுகள் வரக்கூடுமம.ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். ணொழில் போட்டிகள் குறையும்.காரிய தடைகள் அகலும்.முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் கவனம் தேவை.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, மனம் யோகா, தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். பெற்றோர்கள் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.சிக்கலான காரியங்கள் கூட எளிதாக முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அகலும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் கூடும். கணவன் மனைவி நல்ல முறையில் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமும் நிதானமும் அவசியம். அவசர முடிவுகள் தவிற்க்கவும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பம் சீரான பாதையில் செல்லும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. உடல் நலனில் கவனம் தேவை. உஷ்ண நோய் வரக்கூடும்.தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். முன் கோபத்தை தவிற்க்கவும்.பண வரவு நன்றாக இருக்கும்.வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே,உற்சாகமாக காணப்படுவீர்கள். சந்தோஷம் தரக்கூடிய செய்தி ஒன்று வரும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். உத்யோகத்தில் நற்பெயர் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்
மீனம்
மீன ராசி நண்பர்களே,மனதிற்கினிய செய்தி கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் இருந்த டென்ஷன் குறையும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும்.