மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, நற் செய்தி ஒன்று கிடைக்கும்.தடைபட்ட காரியம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கடந்த கால சிந்தனைகள் மனதில் அடிக்கடி வந்து போகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் சீக்கிரத்தில் கைகூடும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும்.மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுப்பீர்கள். மற்றவர்கள் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, தினசரி வேலைகளை உற்சாகத்துடன் செய்ய முடியும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றும்.கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வரும்.சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, எதிலும் ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக செய்யவும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். பிரியமானவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களை தவிற்க்கவும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே,கணவன் மனைவிககுள் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.நேர்த்திக்கடன் தடையில்லாமல் நிறைவேறும். வரவுக்கேற்ற சிலவுகள் உண்டாகும்.
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, மனதில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை. ஜாமீன் கையெழுத்துக்கள் தவிற்க்கவும்.திருமண பேச்சு வார்த்தைகள் தொடங்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் மரியாதை கூடும்.கணவன் மனைவி உறவு பலப்படும்.கொடுத்த பணம் வசூல் ஆகும். தடைபட்ட காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். பகைவர்கள் பணிந்து போவர். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, தீர்க்க முடியாத பிரச்சனையில் ஒன்று தீரும். திடீர் பணவரவு உண்டாகும்.எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுக்கவும். கொடுக்கும் வாக்கிற்கு முக்கியத்துவம் தரவும். முன் கோபத்தால் பிரச்சனை வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். பண தேவைகள் பூர்த்தியாகும்.மன சுமைகள் குறையும்.எதிரிகள் பலம் இழந்து நிற்பர். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை கைகொடுக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும் காலை 11:30 வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்தல் அவசியம். வெளி வட்டாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் மிதமான வருமானத்தை எதிர் பார்க்கலாம்.
காலை 11:30 மணிமுதல் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் அடுத்த இரண்டு தினங்களுக்கு கவனமும் நிதானமும் தேவை.
மீனம்
மீன ராசி நண்பர்களே, அடிப்படை வசதிகளை மேம்படுத்து முடியும். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற நம்ப வேண்டாம்.பண விவகாத்தில் கவனம் தேவை. பெண்களால் சில பிரச்சனைகள் வரக்கூடும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.