டாக்டர்.. காதுவலிக்கு போட மாத்திரை கொடுத்தீங்களே.. அது பெருசா இருக்கே... உள்ள போகுமா..
~ மாத்திரைய போட்டு தண்ணி விட்டா உள்ள போகும் மா...
~ சின்ன வயசுல என் காதுல தண்ணி போனதுக்கு 1 மாசம் எனக்கு காதே கேக்கல சார்.. அதான் தண்ணி விட யோசிக்கறேன்... வேணும்னா மாத்திரைய powder பண்ணி போடவா...
~ எம்மா... அது வாய் வழியா சாப்டணும் மா..
~ ஆனா எனக்கு வாய் நல்லாதானே இருக்கு சார்...
~ எம்மா.. வாய் ல போட்டு தண்ணி விட்டா காதுக்கு போயிரும் மா...
~ காத பஞ்சு வெச்சு அடைக்கணுமா சார்...
~ எதுக்கு..
~ வாய் ல போட்ட மாத்திரை காது வழியா வெளில வராம இருக்க...
~ எம்மா.. நீ எப்பவுமே இப்டிதானா..
~ இல்ல சார்.. மருந்து விடும்போது மட்டும் பஞ்சு வெச்சுப்பேன் சார்...
~ என்னத்தையோ வெச்சுக்கோ மா.. கிளம்பு மா...
~ டாக்டர் சாப்பாடு எப்டி சாப்ட சார்..
~ வாயால தான்..
~ அது காதுக்கு போகாது ல்ல சார்...
~ எம்மா.. நாம வாய் ல சாப்பிடறது எல்லாமே வயித்துக்கு தான் மா போகும்...
~ அப்போ மாத்திரை காதுக்கு போகாதா சார்...
~ 🙄🙄 (திரும்பவும் முதல்ல இருந்தா... ) போகும் மா.. நீ இப்ப போகல னா எனக்கு இப்ப பேதி போகும்..... அதுக்கு அப்றம் உயிர் போகும்...
~ அப்போ நீங்க செத்துப்போனா வேற எந்த டாக்டர் கிட்ட என் காதுக்கு மருந்து வாங்கணும் சார்...???