இதுவன்றோ காதல்
இதுவன்றோ இல்லறம்
பொலிவுள்ள முகத்தை
இரசிப்பது மட்டும் வாழ்க்கையா
தோள் சுருங்கி
கூன் எட்டிப் பார்த்தாலும்
ஆண் மகனின்
அகக்கண்கள் அன்பால்
அணைப்பதென்றால்
இதுவன்றோ நேசம்
பெளர்ணமி நிலவுகள்
பல கடந்து சென்றாலும்
அமாவசை நாளினையும்
வரவேற்று நின்று
காலத்தை வெல்லும்
இதுவன்றோ பாசம்
உயிரோடு உயிர் கலந்த
உறவின் உன்னதம்
மஞ்சத்தில் நிறைந்து வழியாது
நெஞ்சில் நிலை நிறுத்தி
மூச்சிறக்கி இளைப்பாறும்
இதுவன்றோ சுவாசம்
இளமை காலம்
பேசும் இன்பராகம் தொடர்கதையாக
வயோதிகம் வளைந்து
நாணலாய் தைத்து கொண்டிருக்கும்
பாசத்தின் மணம் உலகெங்கும் வீசட்டும்!!
நன்றி: கே.கல்பனா, திருவனந்தபுரம்