Breaking News :

Thursday, May 01
.

பாபர் தன்பாலினத்தவரால் ஈர்க்கப்பட்டாரா?


'துசுக் இ பாபுரி' Tuzuk I Babri அல்லது ' பாபர் நாமா ' என்ற பாபர் தன்னைப் பற்றி எழுதிய நூலில் 120 , 121 ம் பக்கத்தில் சில செய்திகளை பதித்துள்ளார்.  தற்போது விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் பாபர் மசூதி..பாபருடைய ஒரு தளபதியான மீர் பாக்கி என்ற ஓரினச் சேர்க்கையாளரால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது.

ஓரினக்காதல்..

15ம் நூற்றாண்டில் இஸ்லாமிய கலாச்சாரத்தில் பொதுவாக ஓரினச் சேர்க்கை என்பது பரவலாக காணப்பட்டது. துருக்கியர்கள் மற்றும் பதான்களிடம் இது பரவலாக காணப்பட்டது. பாபருடைய மாமா ' சுல்தான் மஹ்மூத் ' ராஜ்யத்தில் உள்ள பிரபுக்களின் அழகான சிறுவர்களை அழைத்துச் சென்று, தனது ' boy's harem ' என்று சொல்லக் கூடிய சிறுவர்களுக்கான அரண்மனையில் வைத்திருந்தார். இது அப்படியே பரவி.. பிரபுக்களுக்கும் குளிர் விட்டுப் போக, இத்தகைய நடவடிக்கைகளை அவர்களும் மேற்கொண்டனர்.

டிஃபன்ஸ்பார்மிண்டியா( 12 ) ல் கூறியுள்ளதாவது, மேற்கண்டோரை ஓரினச்சேர்க்கையாளர்களாகவோ அல்லது இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வோர் எனவோ இவர்கள் வரையறுக்கப்படவில்லை. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் இத்தகைய கேவலமான வழக்கங்கள் பரவலாக காணப்பட்டன. 11 வயதுக்குட்பட்ட இளம் சிறுவர்களை அடிமையாக்கி, அவர்களது ஆண்மையை நீக்கி, பெண்களுக்கான ஆடைகளை அணிவித்து, நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் பாடி ஆட வைத்தனர். பின் அவர்களை வண்டிகளில் ஏற்றி தங்கள் இடங்களுக்கு கொண்டு சென்றனர். அங்கே அச்சிறுவர்களுக்கான இருக்கைகளில் வெவ்வேறு அளவுகளில் ஆப்புகள் இருந்தன. அவற்றின் மீது அச்சிறுவர்கள் அமர வைக்கப்பட்டனர். மகா கேவலமான கலாச்சாரம் தான். ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வானளாவிய அதிகாரம் அப்படி.

வரிசையில் நிற்கும் சிறுவர்கள்..

முதன் முதலில் பார்த்தேன்.. காதல் வந்தது…

ஜாஹிர் உத்தின் பாபர் என்கிற பாபர் , இத்தகைய கலாச்சார சூழலில் இருந்த உஸ்பெக்கிஸ்தானில் இருந்து இந்தியாவின் மீது படையெடுத்தார். எனவே இவரும் இத்தகைய மனநிலையில் இருந்து தப்பவில்லை. ஆம் தனது இளம் வயதில் அதாவது தனது 17 வயதில் காபூலில் உள்ள ஒரு சந்தையில் பார்த்த ஒரு சிறுவனை கண்டதும் காதல் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

" இந்த சமயத்தில் கேம்ப் மார்கெட்டைச் சேர்ந்த' பாபுரி' என்ற ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் கூட ஆச்சரியமாக பொருத்தமாக இருந்தது. அவனிடம் ஒரு விசித்திரமான நாட்டத்தை வளர்த்துக் கொண்டேன். அவன் நினைவால் வேதனையை அனுபவித்தேன். "

" இதற்கு முன் யாரிடமும் நான் ஆசைப்பட்டதில்லை. அன்பு, பாசம் பற்றி பேசியதும் இல்லை. அவனது நினைவால் பாரசீக மொழியில் பின்வரும் சில வரிகளை எழுதினேன். "

"என்னைப்போல் காதலால் யாரும் கலங்கி சிதைந்து போகக்கூடாது. உன்னைப் போல் இரக்கமற்ற அலட்சியமான காதலியும் இருக்கக் கூடாது."

"எப்போதாவது பாபுரி என்னிடம் வந்தார். அவன் அருகில் நான் மிகவும் வெட்கப்பட்டேன். என்னால் அவன் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. அவனுடன் சுதந்திரமாக உரையாடுவது மிகவும் குறைவு. எனது உற்சாகத்திலும் கிளர்ச்சியிலும் அவன் வந்ததற்கு நன்றி சொல்லக் கூட முடியவில்லை.

" ஒரு நாள் இத்தகைய மோகத்தில் ஒரு குழுவுடன் சென்று கொண்டிருந்த போது , அச்சிறுவனை நேருக்கு நேர் சந்தித்தேன். நான் மிகவும் வெட்கப்பட்டேன். கிட்டத்தட்ட துண்டுகளாக சிதறிப் போனேன். நூறு சங்கடங்களுடனும், சிரமங்களுடனும் நான் அவனை கடந்து சென்றேன்.

'என் காதலியைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நான் வெட்கப்படுகிறேன். என் தோழர்கள் என்னைப் பார்க்கிறார்கள்.. ஆனால் என் பார்வை வேறு எங்கோ இருக்கிறது."

என்ற சாஹிலின் இவ்வரிகள் என் நினைவுக்கு வருகின்றன.

"சில நேரங்களில் நான் ஒரு பைத்தியக்காரன் போல மலைகளுக்கும் வனாந்திரங்களுக்கும் செல்கிறேன். என் விருப்பப்படி நடக்கவோ உட்காரவோ இன்றி ஓய்வில்லாமல் இருந்தேன்."

எனக்கு தங்கும் சக்தியும் இல்லை. பிரிந்து செல்லும் வலிமையும் இல்லை. இத்தகைய நிலையில் என்னை சிக்க வைத்து விட்டாய் என் இதயமே!!"

இப்படி உருகி உருகி காதலித்த பாபர் தன் மனைவியை கூட இந்த அளவுக்கு நேசித்ததில்லை. அவரது மனைவி பற்றி இவ்வாறு கூறுகிறார்.

"எனக்கு அவளிடம் வெறுப்பு இல்லை. ஆனாலும் இது என் முதல் திருமணம். அடக்கம் மற்றும் வெட்கத்தால் நான் அவளை 10, 15 அல்லது இருபது நாட்களுக்கு ஒரு முறை பார்ப்பேன்."

எனில் இவருக்கு நேர்ந்தது இதுதான்.

விதியைத் தேடி..

ஜர்னல் ஆஃப் பாகிஸ்தான் மெடிக்கல் அசோசியேஷன் (10 ) படி …

பாபருக்கு அவரது 15வது வயதில் டைபாய்டு காய்ச்சல் வந்தது. நாலைந்து நாட்களில் சற்று குறைந்த போது, தனது சொந்த ஊர் ஆண்டிஜானை மீண்டும் கைப்பற்றும் அவசரத்தில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட, உடல் நிலை மேலும் சீர்கேடு அடைந்தது. மீண்டும் காய்ச்சல் வைரஸ் தொற்று என 25 நாட்கள் வரை படாத பாடு பட்டு, சிறிதளவு தேறிய போது, ' ரபாத் இ கவாஜா மீது போர் தொடுக்க, மீண்டும் 70 மைல் பயணம்.

தனது 23 வயதில் ' சியாட்டிகா' என்ற நரம்பு வலி நோயால், நரம்பு பலவீனம், உணர்வின் மை, கால்களில் கூச்சம் இன்மை, என வரிசையில் நின்றன. இந்த நோய் கீழ் முதுகில் உருவாகி, பிட்டத்தில் ஆழமாக பரவி, காலின் கீழாக பயணிக்கிறது. இதனால் பாபர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபுறம் திரும்ப இயலாமல் தவித்தார். உடம்பில் வலிதரும் கட்டிகள் ஏற்பட மேலும் வேதனையை அனுபவித்தார்.

ஒரு துருக்கிய மருத்துவர் மூலம் சிகிச்சை எடுத்துக் கொண்டார். கட்டிகள் மீது நீராவியை பரவச் செய்யும் இச்சிகிச்சையின் வலியை தாங்க, அவருக்கு ஓப்பியம் வழங்கப்பட்டது. இது அவருக்கு ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தியிருக்கும்.. என்று கூறுகிறது.

ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆர்வலர் உதயன் " தன் சுயசரிதை முழுவதும் எந்த பெண்ணின் மீதும் ஏற்பட்ட காதல் பற்றியோ, காமத்தைப் பற்றியோ கூட குறிப்பிடாமல், காபூலில் உள்ள ஒரு சந்தையில் முதன் முதலில் சந்தித்த ஒரு சிறுவனின் இதயத்துக்கு ஏங்கினேன்" என்கிறார். பாப்ரி என்ற அந்த பையனின் நினைவாகவே இந்த கட்டிடம் எழுப்பப்பட்டது என்கின்றனர். ஏனெனில் இந்த மசூதியில் UJU எனப்படும் தொழுகைக்கு முன் கை கால்களை கழுவும் இடம் இல்லை. பிரார்த்தனை செய்யும் பொது வெளி இல்லை. எனவே இது தொழுகைக்காக கட்டப்பட்ட தல்ல என்ற பிரச்சினைக்குரிய கருத்தை முன் வைக்கின்றனர்.

ஆனால் பாபரும் , பாபுரியும் உடலால் சேர்ந்ததில்லை.. எனில் இவர் ஆண்மை இழந்த வராக இருக்கக்கூடும் என்று சிலர் கூறினாலும், திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுள்ளார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub