Breaking News :

Tuesday, April 15
.

தீபாவளிக்கு என்ன செய்யலாம்?


 24 - 10 - 2022   ஐப்பசி 7 ம்  நாள்  திங்கட்கிழமை    நரகசதுர்த்தியன்று அதிகாலை  எழுந்து,    காலை 3-30 முதல் 6-00 மணிக்குள், எண்ணெய் தேய்த்து, சிகைக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீர் கட்டாயம்.  நீர்நிலைகளில்  குளிப்பவர்களுக்கு   விதிவிலக்கு  உண்டு.  இது கங்கா ஸ்னானம் எனப்படும். இது நிதி இழப்புகளைத் தடுக்கிறது.  முன்பு  நல்லெண்ணெய்  தேய்த்து  குளித்து  புத்தாடைகள்  உடுத்தி  பட்டாசுகள்  வெடித்து தீபாவளியை   மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்..  அன்றைய  தினம்  நம்முடைய  மூதாதையர்களுக்கு  படையல்  இட்டு   வழிபடவேண்டும். 

வருடத்தில்   வேறு எந்த அமாவாசை  மற்றும்  சதுர்த்தசி  தினங்களிலும்  வெந்நீரில்  குளிக்கக்கூடாது.    வயதானவர்கள்,  நோயாளிகளுக்கு   விதிவிலக்கு  உண்டு.

நரகசதுர்த்தியன்றும்,    தீபாவளி அன்றும்  அதிகாலையில்  அனைத்து நதிகள்⸴ ஏரிகள்⸴ குளங்கள்⸴ கிணறுகளிலும் நீர்நிலைகளிலும் கங்கையும்,   எண்ணெயில் லட்சுமியும், அரப்பில்  (சீகக்காய்த்தூளில்) சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும்  வியாபித்து இருப்பதாக ஐதீகம் உண்டு. இன் நாளில் எண்ணை தேய்த்து நீராடுபவர்கள் கங்கையில் நீராடிய புனிதத்தையும்⸴ திருமகளின் அருளையும் பெறுவர்.  

உங்கள் 5 தலைமுறை முன்னோர்களுக்கு படையல் இட்டு வணங்க  வேண்டும்.  ஆவிகளுக்கு வழிகாட்டவும், அவர்கள் சொர்க்கத்திற்கு ஏறவும், அதன் பிறகு நிம்மதியாக ஓய்வெடுக்கவும் அகல் விளக்குகள் எரிய வேண்டும்.

தீபாவளிக்கு பின்பு அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை செய்வது வீட்டிலிருந்து வறுமையை அகற்ற உதவுகிறது.

அமாவாசையின் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சுமார் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் லட்சுமி குபேர பூஜை செய்தால், லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதங்கள் அவளுடைய அனைத்து தெய்வீக மகிமைகள் கிடைக்கும்.
 
அமாவாசையின் நள்ளிரவுக்கு 24 நிமிடங்களுக்கு முன்னதாக தொடங்கி நள்ளிரவு வரை காலகட்டத்திலும் பூஜை செய்யலாம் . இந்த நேரம் மாகா காளிக்கு மரியாதை செலுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, பண்டிதர்கள், தாந்த்ரீகர்கள், புனிதர்கள் மற்றும் இந்த உச்சி காலத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர்கள், இந்த நேரத்தை காளியை வணங்க பயன்படுத்துகிறார்கள்.   

வடஇந்தியர்கள்  இந்த  இரண்டு  முகூர்த்த  நேரங்களில்  ஏதாவது  ஒரு  நேரத்தை   புதுக்கணக்கு எழுத பயன்படுத்துகிறார்கள்.
 
இந்த பண்டிகை நாளில் லட்சுமி தேவி பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டையும் பார்வையிட்டு, எந்தெந்த வீடு முறையாக சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்பட்டு, தெய்வம் வசிக்கத் தகுந்ததாக உள்ளது என முடிவு செய்து அந்த வீட்டில் தங்குகிறார். எனவே லக்ஷ்மி தேவியைப் பிரியப்படுத்தவும், அவரது தெய்வீக ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் இந்த தருணத்தில் வீட்டை முறையாக சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்பட வேண்டும்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி 25 - 10 - 2022   ஐப்பசி 8 ம்  நாள்  செவ்வாய்க் கிழமை  அமாவாசையன்று  மாலை  5 -59  மணி  முதல்    8 -23  மணிக்குள்ளாக   லட்சுமி பூஜை  செய்யும்முறை  :- 

வீட்டை சுத்தம் செய்து, லக்ஷ்மி பூஜைக்கு முன் தூய்மையின் சாரத்திற்காக புனித கங்கை நீர் தெளிக்கவும். கங்கை நீர் கிடைக்காத பட்சம் கடல் நீர் தெளிக்கவும். அதுவும் கிடைக்காத பட்சம் நிலத்தடி நீரில் சிறிது கல் உப்பு கலந்து தெளிக்கவும். (தூள் உப்பு உபயோகிக்கக்கூடாது.) அதன்பின்பு மஞ்சள் கலந்த நீர் தெளிக்கவும். களிமண் அகல் விளக்குகள் மற்றும் கோலங்களால் வீட்டை அலங்கரிக்கவும்.
               ♥  பூஜைக்காக ஒரு பலகை உருவாக்கவும். அதன் மேல் ஒரு சிவப்பு துணியைப் பரப்பி, லக்ஷ்மி தேவி மற்றும் விநாயகர் சிலைகளை அல்லது இரண்டின் படத்தையும் மேல் வைக்கவும். பலகை அருகே தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு செப்பு பாத்திரம் வைக்கவும்.
 
லட்சுமி தேவி மற்றும் விநாயகர் மீது மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டு வைக்கவும். ஒரு  அகல்  விளக்கு (களிமண் விளக்கு) ஏற்றி, பச்சரிசி, சந்தனம், மஞ்சள், குங்குமம், இனிப்புவகைகள், குங்குமப்பூ......... போன்றவற்றை வைத்து நிவேதனம் செய்து வணங்குங்கள்.
 
லட்சுமி பூஜைக்குப் பிறகு, சரஸ்வதி, காளி தேவி, விஷ்ணு மற்றும் குபேர் ஆகியோரை வணங்குவது சடங்குகளின்படி செய்யப்படுகிறது.

பூஜை விழாக்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து செய்யப்பட வேண்டும்.
 
லட்சுமி பூஜையைத் தொடர்ந்து, புத்தகங்கள், வணிகம் அல்லது செல்வம் தொடர்பான பிற உபகரணங்களுக்கு மரியாதை செலுத்தலாம்.

பூஜை முடிந்ததும், இனிப்புகள் மற்றும் பிரசாதம் விநியோகம், தேவைப்படுபவர்களுக்கு தொண்டு போன்ற நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும்.
 
பெரும்பாலானோர்  ஸ்ரீகிருஷ்ணருக்கும்,  நரகாசுரனுக்கும்    நடந்த  போரில்  சாத்தியபாமாவால்   நரகாசுரன்  மரணம்  அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை  சத்தியபாமா  மற்றும்  நரகாசுரன் விருப்பப்படி மகிழ்ச்சியாக   கொண்டாடுகின்றனர்.

ராமர் ராவணனை தோற்கடித்து, வனவாசமும் முடிந்து தனது ராஜ்யமான அயோத்தியத்திற்கு திரும்பினார். அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளில் களிமண் விளக்குகளை மகிழ்ச்சியுடன் ஏற்றி தங்கள் அன்பான இளவரசன் இராமன் 14 ஆண்டுகள் கடந்த பின்பு நாடு திரும்பி வந்ததைக் கொண்டாடினர். வடஇந்தியர்களில் ஒருசாரார், அதுவே தீபாவளி என்று கொண்டாடுகின்றனர்.
 
1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.