இது எல்லாம் ஒரு விஷயமா? மனுஷனுக்கு இதுதானா வேல...
இப்படி கூறிக் கொள்ளும் அனைவரும் உங்கள் மனைவியிடம் ஒரே ஒரு முறை...
"நான் உன்னை ஒரு தடவை தூக்கவா?"
நான் உன்னை தூக்குவது பிடிக்குமா.. என்று கேட்டுத் தான் பருங்களேன்...
அவளின்... அந்த எதிர்பார்ப்பு நிறைந்த அழகான வெட்கம் கொண்ட சிரிப்பின் அழகை...
எல்லா மனைவிக்கும் அவளை தன் கணவன் தூக்குவது, அவ்வப்போது அனைத்து அரவனைத்துக் கொஞ்சுவது என்றால் மிகவும் பிடிக்கும்,
என்ன ஒன்று.....
மனம் நிறைய ஆசை வைத்திருந்தாலும் வாய் திறந்து சொல்ல மாட்டர்கள், "அவராக வரட்டும், அவராக செய்யட்டும்" என்று,
உங்கள் அன்பின் ஆழம் என்ன?....
உங்கள் காதலின் ஆழம் என்ன?..... என்பதை எல்லாம் இதன் மூலம் ஆழம் பார்த்து கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது தான் அவர்களின் இயல்பு,
அதனால் தான் எத்தனையோ கணவர்மார்கள் "இவளுக்கு என்ன செஞ்சும் குறை தான், இவளுக்கு எப்ப பாரு தொன தொனப்பு தான் " என்று புலம்பித் திரியும் நிலைக்கு ஆளாகின்றனர்.
உண்மையை சொல்லப்போனால்
நல்ல குணமும், மனமும் உள்ள மனைவியாக ஒருத்தி வாழ்க்கை துணையாக கிடைக்கையில்,
அவளுக்காக ஆயிரக்கணக்கில் செய்யும் செலவுகளை விட நாங்கள் சில்லரை தனமாக நினைக்கும் இப்படியான எத்தனையோ சின்ன சின்ன விஷயங்களின் மூலம், நாம் கனவிலும் எதிர்பார்க்காத எத்தனையோ சந்தோஷங்கள், நிம்மதிகள் எமது கை வந்து சேரும் என்பதை மறக்க வேண்டாமே....!!
வாழ்க்கை அழகானது,
அதன் சில அங்கங்களை அங்கங்கே தொலைத்து இருப்போம்!...
அது தொலைந்து போன இடத்தில் இருந்து, அவற்றை மீட்டு வந்து வாழ்க்கையை வாழ்வதற்குப் பதிலாக, தொடர்ந்து வந்த பாதையிலேயே வாழ்க்கையை கொண்டு செல்ல எத்தனிப்பதே எத்தனையோ பிரச்சினைகளுக்கு அஸ்திவாரமாக இருக்கிறது.
மனம் விட்டு பேசுவோம்....
குரோதம், கோபம் விட்டு வாழ்வை சின்ன சின்ன சந்தோஷங்களில் கூட தேடிடுவோம்.