எங்கோ படித்தேன்
காதல் ஒரு
கெமிஸ்ட்ரியாம்......
(Chemistry)
ஆனால் நீயோ
இயற்கையோடு
இணைந்த
பாட்டனி........
(Botany)
உன் சிரிப்பில் ரோஜா
மலருது......
உன் பார்வையில் பசுமை
விரிகிறது........
உன் கோபத்தில் பருத்தி
வெடிக்கிறது.......
உன் பாசத்தில் கனிகள்
பழுக்கிறது.......
உன் துக்கத்தில் வேம்பு
கசக்கிறது..........
உன் மகிழ்ச்சியில் தேன்
சுரக்கிறது........
உன் நடையில் நெற்கதிர்
ஆடுகிறது.........
உன் அருகில் மல்லிகை
மணக்கிறது........
உன் நிறத்தில் மஞ்சள்
விளைகிறது........
உன் மேனியில் இலவம்
பறக்கிறது.......
எல்லாம் சரிதான்
கெமிஸ்ட்ரி இன்றி
ஓர் அணுவும்
அசையாதே........
.
காதல் ஒரு கெமிஸ்ட்ரியாம்?
.