காதலில் மலர்தல்...
உண்மை பரிமாணம்...
🌸காதலின் முதல்பாடம்...
காதலை கேட்பது அல்ல...
காதலைக் கொடுப்பது...
🌸கொடுப்பவர் ஆகுங்கள்...
ஆனால்,
மக்கள் நேர் எதிராகச் செய்கிறார்கள்...
'கொடுக்கும்போது கூட...
அது திரும்பவேண்டும் என்ற
எண்ணத்துடன்தான் கொடுக்கப்படுகிறது...'
இது ஒரு பேரம்.
🌸அவர்கள் பகிர்ந்து கொள்வதில்லை...
தங்கு தடையின்றி பகிர்ந்து கொள்வதில்லை...
ஒரு நிபந்தனையோடு
பகிர்ந்து கொள்கின்றனர்...
🌸ஒரு மூலையில் கவனித்துக் கொண்டே இருக்கின்றனர்...
அது திரும்ப வருகிறதா, இல்லையா என்று பார்க்கின்றனர்...
இந்த மிகப் பாவப்பட்ட மக்கள் !
🌸"காதலின் இயற்கையான
இயக்கம் என்ன?
என்று அவர்களுக்குத் தெரியவில்லை...
நீங்கள் பொழியுங்கள்...
அது வரும்.
🌸அப்படி வரவில்லையா?
எதற்கும் கவலைப்பட வேண்டாம்...
ஏனென்றால், காதலன் அறிவான்,
காதலிப்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்று...
அது வருகிறதா? நல்லது.
மகிழ்ச்சி பன்மடங்கு ஆகிறது.
🌸ஒரு போதும் திரும்பி
வரவில்லையென்றாலும் கூட...
'காதலித்தல்' என்ற செயலிலேயே
நீங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள்...
பரவசம் கொள்வீர்கள்...
யார் கவலைப்படுகிறார்கள்.
வருகிறதா, இல்லையா என்று?
🌻காதல், 'தனக்கே உரித்தான
சொந்த உள்ளார்ந்த மகிழ்ச்சியைப்' பெற்றிருக்கிறது...
நீங்கள் காதலிக்கும்போது அது நிகழ்கிறது.
🌻பலனை எதிர்பார்த்துக்
காத்திருக்கத் தேவையே இல்லை.
மெல்ல மெல்ல மிகுதியாகக்,
காதல் உங்களை நோக்கித் திரும்ப
வருவதை நீங்கள் காணலாம்...
🌻ஒருவன் காதலிக்கிறான்...
காதலைப் பற்றி அறிந்து கொள்கிறான்...
காதலிப்பதன் மூலம்...
அதில் நீந்துவதன் மூலம்...
நீச்சல் கற்பதுபோல்,
காதலிப்பதன் மூலம் காதல் கற்கப்படுகிறது...
🌻மக்கள் மிகவும் கஞ்சத்தனமானவர்கள்...
யாராவது பெரிய காதலி கிடைப்பதற்க்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்...
சும்மா காத்திருக்கிறார்கள்...
எங்கிருந்தாவது கிளியோபாட்ரா வருவாள்...
பிறகு தங்கள் இதயத்தைத் திறக்கலாம்
என்று இருக்கிறார்கள்...
🌻ஆனால், நாளைடைவில்...
அவர்கள்....
எப்படி இதயத்தை திறப்பது என்பதையே...
முற்றிலும் மறந்து போய் விடுகிறார்கள்...
🌸காதலின் ஒரு வாய்ப்பைக்
கூட இழக்காதே...
தெருவில் செல்லும்போது கூடக்
காதலிக்க முடியும்...
பிச்சைக்காரனைக் கூட
காதலிக்க முடியும்...
அவனுக்கு ஏதாவது நீங்கள்
கொடுத்துத்தான் ஆக வேண்டும்
என்று கட்டாயமில்லை...
குறைந்தபட்சம் நீங்கள் சிரிக்கலாமே,
அதற்குச் செலவில்லையே...
🌸ஆனால், அந்தப் புன்சிரிப்பே உங்கள் இதயத்தைத் திறக்கிறது...
உங்கள் இதயம் அதிக
உயிர்த்துடிப்புப் பெறுகிறது...
🌸யாரவது ஒருவரின் கையைப் பிடியுங்கள்...
இதயத்தில் மலருங்கள்...
நண்பர் அல்லது புதியவர்...
சரியான ஆள் கிடைத்தால்தான்,
அன்பு செய்யமுடியும் என்று
காத்திருக்காதீர்கள்...
அப்படியென்றால் சரியான ஆள்
கிடைக்கவே மாட்டான்.
🌸வாழ்க்கையில்,
அன்பு செய்து கொண்டே செல்லுங்கள்...
எவ்வளவு அதிகமாக நேசிக்கிறீர்களோ,
அவ்வளவு அதிகமாக,
'சரியானவர்' கிடைப்பது சாத்தியம் ஆகும்...
🌸ஏனென்றால்,
உங்கள் இதயம் மலரத் தொடங்குகிறது...
'மலரும் இதயம் ஏராளமான
தேனீக்களை, அன்பர்களைக்
கவர்கிறது'
🌸ஆனால், நீங்கள் மிகத் தவறான வழியிலே பயிற்சி கொடுக்கப்படுகிறீர்கள்...
முதலில், ஒவ்வொருவரும் தான் ஏற்கனவே
ஒரு காதலன் அல்லது காதலி என்கிற தவறான மனப்பதிவோடு வாழ்கிறீர்கள்...
🌸நீங்கள் பிறந்தவுடனேயே...
நீங்கள் காதலர் என்று எண்ணுகிறீர்கள்...
'ஒருவர், காதலன் அல்லது காதலி ஆவது
என்பது அவ்வளவு எளிதானது அல்ல'
ஆம்.
அதில் ஒரு உள்ளார்ந்த
ஒரு ஆற்றல் உள்ளது.
அந்த உள்ளாற்றல் பயிற்சி
கொடுக்கப்பட வேண்டும்...
🌸ஒரு விதை இருக்கிறது...
அது பூவாக வேண்டும்...
நீங்கள் உங்கள் விதையை
எடுத்துக் கொண்டே செல்லலாம்...
ஒரு தேனீ கூட வராது.
🌸எப்போதாவது விதைகளை
நோக்கித் தேனீக்கள் வருவதைக் கண்டிருக்கிறீர்களா?
அவைகளுக்கு, விதைகளிலிருந்துதான்
பூக்கள் வருகின்றன என்று தெரியாதா?
ஆனால், பூக்களாக ஆகும்போதே
அவை வருகின்றன...
பூவாக மலருங்கள்...
விதையாக தங்கிவிடாதீர்கள்.
ஓஷோ: அதி உன்னத வழி.