Breaking News :

Friday, May 02
.

முத்தத்திற்கு மட்டுமே எழுதப்பட்ட நூறு கவிதைகளின் தொகுப்பு


முத்தம் - 100 மொத்தமும் – 100

1.
அவன்
இதழ் காணா

கனிகள்..
கனியாது...

அவன் இமை விழா
பூக்கள் மலராது..

அவன் இதழ் தீண்டா..
என் மது 
போதை தராது..
உயிர் குடிக்கும்
காதலில் முதல் பார்வையே..
ஊடலில் தான் ஆரம்பம்...

2.
வார்த்தைகள்
தராத ஆனந்தம்..
அவன் விரல் நுனி..
என் சேலை தொடும் நேரம்..
தீயிட்டு எரியும்
என் மன கதவுகள்..
அவன் இதழையே
தீ அணைப்பானாக கேட்கும்..

3.

காதல் செய்ய
காது மடல்களை படித்து 
பார்க்கும்
அவன் இதழ்கள்....
சொல்லும்
காது மடல்கவிகள்...
களிப்பு..

பாவம்
செய்ய அவன் நினைத்தால்
பாலாடையை
விலக்க மறந்தே
பால் குடிப்பான்..
அவசரத்தில்...
அதிசயமாய்..

ஆணைக்கு அடி பணிய
ஆணையிடும்
அவன் இம்சை...
இரு கண்களில் இரக்கமாய்..
என் பால் மடி கேட்டு..
பாவமாய்...

படுக்கைக்கு
கால் வலிக்கும்
என்று 
கவலைப் படும்
உன் கனிவுகளை
கொஞ்சம்...
என் கன்னங்களுக்கும் 
தரலாமே..
கண்ணா...

கூந்தல்
காட்டுக்குள் நுழைந்த
காட்டு மிருகத்தை பிடிக்க..
உன் விரல்கள்
வேட்டைத் துப்பாக்கியா..
அது குறி தவறி
என் இடையில் சுடுகிறது...

சுடவைத்த
ஊன்களை ஏன்
நீ
உன் வியர்வையில்
ஊற வைக்கிறாய்...
என்ன
உப்பு குறைவாக உள்ளதா...

நான்
நாண் விலக்கும்
நேரம் வந்துவிட்டது..
இனி
அவன் தான்
நாண வேண்டும்...
என் நா நிலம் நோக்கையில்..

4.
வஞ்சியின்
கண்களை
கெஞ்சி கேட்டுப் பெற...
எண்ணாதே..கள்வா...
கொள்ளையடி..
அதுவே கூடலில்
முதல் படி 
வெற்றிக்கு...

கண்ணா...
எதை நீ
வைத்த
இடம் தெரியாமல்
தேடுகிறாய்...
அதுவும்
இமை மூடி...
இதழ் கொண்டு..
என் இடையில்...

5.
கதவுகளின் தாளை
அவன்
கண்கள்
நோக்கினாள்...
காமன்
அவன் உடையை
கடன் கேட்பதாக அர்த்தம்...

6.
கண்ணா
இடை இடையே
கொடி காட்டி
நிறுத்த வேண்டுமா...

உன் இரயிலை...
பின்பு ஏன்
என் கண்களில்
பச்சை கொடியை
எதிர்பார்க்கிறாய்...

நான்
நீராவி இயந்திரமடா..
பாதியில்
நிறுத்தாதே..
இடை நில்லாமல் தொடர்...

7.
மேடு பள்ளங்கள்
பாராமல்
வேகமெடுக்காதே..
வண்டி விரைவில்
குடை சாயும்..

நிதானித்து
நின்று..
அச்சாணியை
அரவணைத்துச் செல்..
8.
கண்ணாளா
ஒரு
திருட்டு கவிதை
வேண்டும்.. என்றேன்..

என் இமைகளை
மூடிக்கொண்டு
இதழ் வழி 
எழுதினான்..
இருதயத்தின் மீது..
9.
பரிசாக
அவன்
முத்தம்...
படுக்கை கலைத்து
அதிகாலை எழுகையில்..
பரிகாசம்..பரவசம்..

10.
பறந்து வரும்
முத்தங்களை
சுவைத்த காற்றை
கைது செய்ய வேண்டும்..
காதலர்களே.. இல்லை
காவலர்களே..

11.
கூடல்
முடிகையில்..
நீ தரும்
சோம்பல் முத்தம்..அதன்

சத்தத்தில் சொல்லும்
நம் வெற்றியை...
கோரிக்கையாக
இன்னும் ஒன்று..
வேண்டும் என கேட்கும்..

பரிசீலனை 
தேவைப்படுவதில்லை..எனக்கு
உன் பரிசு மட்டுமே தேவை..

வா..முதுகில் கையெழுத்திட்டு
முடித்து வை..

12.
என் உதடு கடித்த
எறும்புகளை
ஓட விட்டு
அடித்து கொள்வதே ..அவன்
வேலை..
அவனுக்காய் சேமித்ததை
திருடிச் சென்றனவாம்..
13.

என்ன கொடுமை
பாருங்கள்..குடிக்க
ஆடை இல்லா
பால் வேண்டுமாம்..
அவனுக்கு..

என் மாராப்பை கேட்கிறான்..

வடிகட்ட...
என்ன சொல்ல...

14.
வாயை மூடாமல்
இதழ்களை
இணைக்காமல்
வைத்திருக்க சொன்னான்..
நானும் சரி
முடிஞ்சவரைக்கும்
இலாபம் என நினைத்தேன்..

அவனோ
அப்படியே சுடரொளி காட்டி
உற்று உற்று பார்க்கிறான்..
விளக்கை அணைத்துவிட்டு

கேட்டால்..
இதழ்களில் கவிதை படிக்கிறானாம்..
இவனை என்ன செய்ய..

15.
இரவை அழைத்து
இதழ்கள் கூப்பி
இடையில் படறி
இமைமூடி
நெற்றியில் இசைவதே
இன்பம்..
இறுதியில்..

16.
பார்வை பழகலும்
பாவை இதழ்களும்
சண்டையிடும் நேரம்..
தேன் குடம் உடையும்...அவன்
மீசை முடிகள் பட..
17.
இடைவெளிகள்
இல்லா இடத்திலும்
இன்னும் பக்கம்வர
அழைக்கும்
அவன் விரல்கள்..
படுக்கை முத்தம்..
18.
இமைகளை
இறுக்கமாய்
மூடிக்கொண்டாலும்..அதை
துளையிட்டு
அவன் இதழ்கள் எழுதும்
கவிதைகளை படிக்க
ஆர்வம் கொள்ளும்..என்
ஆசை முத்தம்..

19.
என்
பருவகாய்ச்சலுக்கு
அவன் இதழே
இரவு மருந்தாம்..

அதிகாலையில்
இரண்டு முறையும்..இரவில்
மூன்று முறையும்
குடிக்க வேண்டும்... சாப்பாட்டுக்கு பின்..
படுக்கைக்கு முன்..

20.
பாராமல்
தரும்
தரை வார்ப்புகள்..
கணக்கில் சேரா..

இடைவெளி இன்றி
இனிப்பு சேர்த்து..
இருபது நிமிடம் வேகவைத்த
தேனீரே ருசிக்கும்..

21.
கண்ணா..
நீ நேற்று முடித்த
இடத்திலேயே தொடங்கு..

இல்லையேல்...எனக்குள்
அடங்கு...
எது விருப்பம்...

என் மேலுள்ள இருவரிகளில்..
22.
எச்சில் பண்ணாத
வெற்றிலை போல்..என் நா..
எப்படி
சிவந்திருக்கு பாரடா..

எல்லாம் உன்னாலே..

23.
படர்ந்த கொடிகளின்
அடியில் மறைந்த
பழுத்த கனிகள்....

குருவிகளுக்கும் கிடைக்கா
குடுப்பினை..உனக்கு..

24.
வாய்க்கு வாய்ப்பில்லை
என்றால்..இங்கு
நடப்பது என்ன போட்டி..

இதழ் கள் வடிக்கிற தென்றால்
கைது செய்ய நான் ரெடி..

இப்போது
உறக்கம் வருகிறதென்றால்
உடைகள் பறிக்க...
போராட்டம் நடத்த
நான் ரெடி..

விடியும் வரை போராடுவோம்..
25.
பார்வையில்
படைக்க முடியும்..
பழரசம் பருக முடியும்..

இடையினில்
தொடர முடியும்.. அவன்
தொடர்ந்தால் எனக்கும்
முடியும்...

பேரின்ப எல்லை கோட்டை தொட..

26.
உன்
இதழுக்கு இடைவெளி விடு..
நீ எழுதிய
கவிதைகள்.. என்னுடன்
கதைகள் பேச
ஆரம்பிக்கிறது..
சத்தமாக..

27.
பூக்களுக்கு
கோபமடி..உன் மீது..

நான் உன்னை மட்டுமே
முத்தமிட்டேனாம்..

28.
பார்வைகள்
செய்யாத
கூடலை..தீண்டல்கள்
செய்ய இயலாது...
காதலில்..

29.
மூடி
மறைக்காத
கனிகள் கசக்கவும்
செய்யாது...மூடியே
வைத்திருந்தாலும்
இனிக்கவும் செய்யாது..அது
பருவகாலம் 
மாறும் வரை...

இயற்கையில்
பழுக்கும்
மாங்கனிகளுக்கு மட்டும்..

30.
முப்பதிலும்
மூச்சு வரும்..
மூப்பதிலும் முழுசும் வரும்..
ஆசை..ஒரு முடிவிலி...

31.
கூச்சங்கள்
கூடக்கூட
கூடும் நேரம் கூடிப்போகும்..
ஊடலில்..

32.
புத்தக  தலைப்பில்
முத்தம்...அவன்
நெற்றியில்.. என் இதழ்..

33.
நொடிகளில்
நூறு கவிதை..என்
இதழ்வரிகளில்
எழுதும்..
என்னவன் விரல்கள்..

34.
பதிவிடா
முத்தங்களில்..சத்தில்லையாம்..
எம் காதலில்
ஊட்டச்சத்து குறைபாடு..
35.
முகவரியின்றி
பெறப்பட்ட காதல் கடிதங்கள்..
காற்றில் அந்த நடிகை இட்ட
முத்தம்..

36.
படுக்கை விரிப்புகளின் மேல்
பூக்கள்.. 
என்னைவிட அழகில்லை..
அவனுக்கு..

37.
பந்தய ஓட்டமில்லை..இது
நீ வெற்றியை தொட்டதும்
ஓய்வெடுக்க..
நானும் வெற்றி பெற வேண்டும்..
நீ வா..

38.
எண்ணங்கள்
மட்டுமே.. தேவை
எண்ணிக்கை.. அல்ல..
கட்டிலில்
அவன் முத்தம்...
எனக்கு..
39.
சத்தங்களே
முத்தங்களின் இனிமையை
தீர்மானிக்காது..
மணவாளா..

என் மாராப்பை
கேட்டுப்பார்.
மன்னித்தால்  
மனமிறங்கினால்
உனக்கே வெற்றி...

40.
முடிவிலா
முத்தங்கள் வேண்டும்.. 
நீயும் நானும்
முடிவை எட்டும் வரை
கூடலில்..
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு
என் கன்னத்தில் தொடங்கு..

41.
பத்தினி
முத்தம் வேண்டும்.. என்னை
பட்டினியே
போட்டிராத
அவனிடம் கேட்டேன்...
கண்ணாடிக்கு முன்..

42.
தேர்ந்தெடுத்து
முத்தமிடு..கண்ணாளா..
இது கோடிட்ட இடத்தை நிரப்பும்
இறுதி தேர்வு..

43.
படைக்காத
பதார்த்தங்கள்
மசக்கையில்
என்னாகும்-நீ
மறுக்கையில்..
பசி தீர
பரிமாற நான்..
தயாரடா..

44.
மார்கழியில்
நித்திரையாம்-என்
மார்-கழிக்குது..நீ...வா..

45.
அசையும் தொடையும்
நிறையும் நிரையலாம்.. நீ
எழுதும் என் இடை கவியில்..
என்னவனே..

46.
வியர்க்கா
உழைப்பு 
வீம்பு பேச்சு-கண்டால் போச்சு..
கூச்சமும் வெட்கமும்
வேட்டி..சேலைக்கு..

47.
பசித்திருக்கையில்
உணவை புசிக்கா விடில்-நீ
பாவியடா..இந்த
படுக்கையில்..

48.
நடுநிலையுடன்
நடந்து கொள்ளடா-போட்டியின்
விதிகள்
விடியும்வரை தொடரணும்..
நடுவனே...
என் நாவலனே...

49.
கண்ணுக்கு கீழே
மட்டுமே-நீ பாராதேடா..
கண்ணாளா
இந்த கன்னியையும் பார்..
ஊடல் இடையைவிட
இமைகளில் சுவைக்குமடா..
சூடாக..

50.
இமைகளில்
இசைத்ததுபோதும்..
இளமை காத்திருக்கு..
என் கவனங்களை கலைத்து
கவிதை எழுது..
சந்திரன் சாட்சியாக
கத்தும் வளைப்பேச்சில்
கவனம் செய்யாமல்
சாந்தி முகூர்த்தம்...
இன்று..
வாராய் வைத்தியரே..என்
உடல் பசலையில்
பல நாளாய்...

51.
பார்வையால் மட்டுமே
கொள்ளும்... கூடல்..
பாராமலே கூடும்..

ஆனால் சுவைக்காது..

52.
பரவசம்
பழரசம்
புதுசுகம்
நிரந்தரம்...தாரம்..

கட்டில்
தொட்டில்..
வீட்டில்..
இதய கூட்டில்..துணைவி..

ரணம்
மரணம்..
பயணம்..
மயானம் வரை...மனைவி...

53.
நான் உன்னை
காதலிக்கிறேனடா..

வாடிய கூந்தல் வாசனை
வீசுது..
வற்றிய மனதில் 
வாத்தியம் முழங்குது..

பூக்களின் வாசனை மாற்றி
பீடியின் வாசனை பிடிக்குது..

விக்கல் வரும் நேரங்கள்
விழிகள் உன்னை கண்டு வியக்குது..

பேசா பொம்மைகளையும்
கட்டியணைக்க தோன்றுது..

கட்டிலின் சுகம் மறக்க
தரையும் தலையணை கேட்குது..

பாராமல் நோவு வந்து
பசியெடுக்க மாட்டுது..உன்
பாதம் பட்ட மண்ணையே
அள்ளி தின்ன தோனுது..

பரலோகம் நான் காண
உன் பருத்த தோளை பார்க்குது..

உன் மூசையோடு
போட்டிபோட
என் கூந்தல் படுத்தி எடுக்குது..

வாங்க..வந்து
பத்தவைக்க..
குத்து விளக்கு போதுமா..இல்ல
குத்த வச்சதும் வேணுமா..

குறுக்கு நெடுக்கும்
நடந்து போக..
குடுமி சண்ட நானும் போட..

உன் அம்மாவுக்கு சம்மதமா..என்
ஆசைக்காரா நீ கேட்டு
சொல்லு..

அம்மி மிதிக்க நானும் வாரேன்...
அப்புறம் மத்ததெல்லாம் 
மறைத்து தாரேன்..

நான் 
உன்னை காதலிக்கிறேனடா..

கிராதகா..
லவ்வு..லவ்..பண்றேன்..
புரிஞ்சா.. வாயா..
குட்டிப்பையா..என்
குட்டி தூக்கத்தில் வந்தவனே..

குசும்புக்கார
என் மன்னவனே..

54.
இரவுக்கே
தெரியா முத்தமும்
இமைகளில் தீண்டா சத்தமும்

கண்களுக்கு
சொந்தமில்லையாம்...
கூடலில்..
55.
உறக்கம் வரும்நேரம்
உதடு
குவித்து
அவன் புன்னகைத்தால்.
இன்று பௌர்ணமி நான்..

காலை கண்விழிக்கையில்
இதழ் சுருக்கி
புன்னகைத்தால்..
நேற்றிரவு அவனே அமாவாசை..

56.
வண்டுகள்
சேமிப்பு.. தேன்..
மனிதருக்கு..

என்
காதலின் சேமிப்பு.. நான்..
அவனுக்கு..

இரண்டுமே தித்திக்கும்..
நாவில்...

57.
இரவு பதிப்பு
இடையில்
நிறைவடைந்தால்..

அதிகாலை பதிப்பு
இதழில்
நிறைவடையும்
என்பது
எழுதாத விதி...
கூடலில்..

58.
குளத்தில்
மீன் பிடித்தன..கண்கள்

உன் சேலையே வலை...

நானே மீனாய்...
வீணாய்... 

நீ குளத்தில்.....
நீராட....

59.
கனவு பலிக்க
ஆசைப்படும்
மனதுக்கு...

கண்ணில்லா கனவுகளின்
வலி
பல நேரம் தெரிவதில்லை...

கட்டில் சொந்தமானால்
மட்டுமே
தொட்டில்
கிடைப்பதில்லை....

60.
நீ
அருகில் இருந்தால்
உறங்கியும்
விழித்திருக்கும்
விழிகள்...

என் கல்லறையில்..

61.
என்
பசிக்கு உணவாகா விடில்..நீ
அருகில் இருந்தும்
என்ன பயன்..என்னவனே..

என்
தூக்கத்தை கெடுக்கா விடில்..நீ
படுக்கையில் இருந்தும்
என்ன பலன்..பாலகனே.

ஏன்
பாதைகள் மாறினாயா..மாற்றினாயா..
இல்லை..
பாதைதெரியாமல்
பரிதவிக்கிறாயா..உன்
கைகளை மட்டுமே கொடு..
நான்
வழிகாட்டுகிறேன்..
தருவாயா..
பால்வீதியில் சென்று
பசியாறுவோம்..

காதல்
தீராது..நீ
என் இமை பற்றாத வரை..

தீயாய்
என்னை விரல் சுட்டாத வரை..

பகையும் நெருங்கும்
நம் காதலை..
பற்ற..
உன் இதழுக்கு 
என் மீசையே பகையாம்..

62.
சிறை நிரப்பும்
போராட்டம்.. இப்போது என்
இடையில்
அவன் தொடங்கினால்...

இன்றே
இடைத்தேர்தலில் வெற்றி....

63.

என்
கார்மேகத்தினுள்
புகுந்த
என் சூரியன்.. இன்னும்
கண்விழிக்க விருப்பமின்றி..
இன்னும் கொஞ்சநேரம் என
இன்னும் இன்னும்
இருவிழிகளை மூடச்செய்து
துயில் கவிதைகளை
படுக்கையின் இறுதிவேளையில் கேட்க..

துயில் கவிதை சொல்ல என் 
துப்பட்டா ஓரத்தில்
முகத்தை (மட்டும்)
மூடிக்கொண்டேன்...
எங்கள் இரவு இன்னும் நீளம்..
நீளும்...

64.
உன்
இதழ் பதிவேட்டில்
இல்லாத - என் பாகங்களை நீக்கிட
என் இருதயம் ஆணை
இடுகிறது..
கண்ணா..

ஒருமுறை
இதழ்
பதிவிட்டு போ...

பாவமடா..
சேர்த்தவை...

கண்ணா..
என் கவிதையை
பற்றடா..அதற்குள்
ஓடு.. ஒளி..விளையாடு..
குதூகலி..கும்மாளமிடு..

மாற்றாக..என்னை
கேட்காதேயடா..நான்
தர மாட்டேன் - என்
படைப்புகள் 
அவன் பதிவேட்டில் மட்டுமே..
பதிவிட
காத்திருக்கு..

65.

தீதும்
நன்றும்
உன் விரல் தர வாரா..நீ
தீண்டாத என் சேலை
உடுப்பாகா..என் உடல் உணவாகா..

பாதியில்
வடித்த சோறும்..
மீதியில் 
முடித்த களவும்..

ருசிக்கா...

66.
அவனியில்
உடையில்லா நேரங்கள்
கள்..

அவன்
விரல் பட ஆடை ஓய்வுபெறும் நேரமது
மது..

அவன்
இதழ் தீண்ட திமிரும் மனம்
மணம்..

அவன்
நா பதித்த  சுவை
வை..

இடையும்
ஒரு வேலை(ளை)
நீர்த்து போனால்
அந்நாள்..
பொன்னாள்..
ஊடலில்..

67.

தக்காளியாய்
நான் படுக்கையில்
இன்று..
அவன்
தற்காலிகமாய்...

தரையில்..

இன்னும் மூன்று நாள்...

68.
நான்
கோபமாக
வாய் மூடி
மௌனமாய்
இருக்கும் போது..

அவன்
எழுதும் இதழ்வழி
கவிதைகளில்
ஏனோ அத்தனை சுவை..

என் மனதின் வலி புரிந்து
என் இதயம் கனிய
அவன் இதழ்கள் புரியும்
நடனங்கள்
என் வாழ்வின் கோடி கோடி ஆனந்தம்..
அது காதல்...

காதல் பெருகி
ஊற்றாக 
என் இமைகளில் வருகையில்
அதை
விரல் நீண்டு தீண்டும்
அந்த
நிகழ்வை நினைவுகளோடே
தொலைந்து போக 
சொல்லும்...

அவன் மடியில்
முகம் சாய...
அன்னை மடியாகும்..காதலில்.

அதற்காகவே அழவும் தோன்றும்...
அவனிருக்கையில்...

69.

இமைகளே
நுழைவுச்சீட்டு
இதழ்வழி புன்னகையோடு
தகவல் சொல்லி..

காதல் கொண்டு
என் மனதோடு
நீ
வரலாம் வாடகைக்கு..
ஆயுள் வரை..

நான்
என் அம்மாவிடம்
வட்டிக்கு வாங்கி
கட்டிவைத்த கட்டிடங்கள்
என் கன்னங்களில்...

என்
கற்பின் ஆளுமையில்
வளர்ந்த
கை படா..மாதுளை பழங்கள்.
உணவறைகள்...

படுத்து தூங்க
இரு மார்பிள் போட்ட அறைகள்...

எப்போதும்
வாசனை வீசும்
மொட்டை மாடி
கூந்தல்கள்...

அன்பாய்
நீ
தீண்டும் போது
கிடைக்கும் தண்ணீர் குழாய் வசதிகள்..

மூன்று பக்கமும்
பார்த்து ரசிக்க முப்பரிமாண
குளியலறைகள்..

இத்தனையும்
காத்திருக்கு
மணமுடிக்கா மணவாளா
உனக்கு..

உன் விழி வழியே
என் வாசலில் வந்து மணி அடி...

70.

தலைக்கு
குளித்து
மல்லிகை பூ வைத்து..
நான்
வாசலில் காத்திருந்தாள்..
அன்று...

இடுப்பு 
வலிக்குதென்று
தைலமிட்டு
நீவ சொல்வேன்...
அன்று...

இரவில்
குளிக்க
சுடுநீர்
நீ கேட்பாய்...
அன்று...

இருமல் தீர
நெஞ்சில்
மருந்து தடவ சொல்வாய்..
அன்று...

வீட்டிற்கு
நேரமாய் வந்து
குழந்தைகளை தூங்க
சொல்வாய்...
அன்று...

மாதத்தின்
முதல் நாள்
மரிக்கொழுந்தும் மாதசம்பளமும்
கொண்டு வருவாய்...
அன்று..

மார்கழி மாத
குளிரில்
கம்பளியாய்
என்னைக் கேட்பாய்...
அன்று...

எனக்கு பௌர்ணமி தான்...
விடியும் வரை...

71.

முறையா
கண்ணா
நீ
செய்வது...

நீ
உன் உடையவளை முத்தமிடுவது..
என்
இதழ் கொண்டல்லவா...

நீ
அவளை கட்டியணைப்பது
என் கரம் கொண்டல்லவா...

உன் ஒவ்வொரு தீண்டலிலும்
தூண்டலிலும்
நானே நிறைந்திருப்பேன்..

உன் முதல் காதலியும் நானே..
முதல் சொந்தக்காரியும் நானே..

நீ
என் உடல் விட்டு
மற்றொருத்தியை தொடலாகாது..

எனவே
என்னையே 
உன் முதலும் கடைசியுமாய்
ஏற்றுக்கொள்....
இதுவே தண்டனை..
நம் காதலில்..

72.
காதலில்
தோற்றால்
அந்த நொடி
தலை பாரமாகும்...
இருதயம் கணக்கும்..
தொண்டை சுருங்கும்..
கண்கள் குழமாகும்...

வேகமாக வரும்
இரயில் கூட
தன் மேல்
ஆயிரம் முறை
ஏற்றி இறங்க சொல்லும்..

பிறரின்
மூச்சுக்காற்று பட்டாலே
கீழே விழுந்து காயம் படும்...

கட்டிலும் நோகும்
கால்கள் செருப்பை வெறுக்கும்..

செல்போனும் கல்லாய் மாறும்..

73.

கட்டில்
நேரம் வந்ததடா..

உன் காலடி சத்தம்
இன்னும் கேட்கவில்லை...

உயிரை குடிக்க
காத்திருக்கும்
இந்த காதலின்
தொல்லையும் தீரவில்லை...

தீராத நோவு
எனக்கு...

உன் விழிகளை காண வேண்டும்

உன் இதழ் முத்தம் கிடைக்க வேண்டும்..

உன் விரல் என் முதுகில்
கையெப்பமிட வேண்டும்..

மடிமீது தலை சாய்ந்து
நான் தாலாட்ட வேண்டும்..
நீ பாராட்ட வேண்டும்..

உன் மார்பு முடிகளில்
என் மனதை தேட வேண்டும்..

அங்கே
மறைத்த என் காதலையும்
நீ காட்ட வேண்டும்..

காது மடல்கள்
வாசிக்க வேண்டும்..

அது உன் காதலையே சொல்ல வேண்டும்..

இடையினில்
யார்
முதலில்
தொடங்குவது
என்பதை
என் கரங்களே
தீர்மானிக்க வேண்டும்...

நீ கண்ட கேட்ட
அத்தனை கதைகளையும்
உன் ஆசை மனைவி
எனக்கு
அர்பணிக்க வேண்டும்...

பள்ளியறையில் 
நான் 
தனியே
பாலோடும் பழங்களோடும்...

நீ
மாங்கல்யத்தோடு மட்டுமே வா...

74.

அழகா..
உனக்கு தெரியா..
பிரம்ம இரகசியம்
நான் ...

உன்னை
விரலால் தீண்டியே  உருக்குவேன்..

உன் விரல் 
என் மூச்சுக்காற்றை
தீண்ட 
நெருப்பாய் எரிவேன்...

என் பழத்தோட்டத்தை
தாள் இடுவேன்..

அதை என் உத்தரவின்றி
பறிக்கவும்
கட்டளையிடுவேன்..

நீ என் பழம் பறித்து
ருசிக்க
ஏங்குவேன்...

இடை நோவு வரும்
வேளையில்
நீயே சகுனி என்பேன்..

முரண்பாட்டு 
மூட்டையடா நான்....
ஊடலில்...

75.
குளிருக்கு
இதமாக
அவள் இதழ் ஐஸ்கிரீமும் கேட்கும்..

கோடைவெயிலில்
அவள் 
துப்பட்டா
ஓரமும் குளிராய் கேட்கும்..

குடைபிடிக்க
வேண்டாமென
மழையில் ஆட்டமும் போடும்..

அவன்
விரல் தீண்டிய காய்ச்சலில்
ஊசியும் போடும்...

ஊமத்தம் பூவையும்
வாசம் என சூடும்...

சூடிய மல்லிகையும்
அவனின்றி
அரளியாய் மாறும்...

மழை 
பெய்து
ஓயும்போது வரும்...
ஒரு துளி சாரல்...

உன் முத்தம்..
காதலின்  முடிவு.
76.

இதுவரை
எங்கள்
காதலில் கூடாத
இரு கவிதைகள்..
நாங்கள் சுவைக்காத
இரு கவிதைகள்

என்று ஒன்றிருந்தால்..
அதை எங்கள்
இதழ் கொண்டு
வாசிக்க ஆசை எங்களுக்கு...

கவிகள்
சுவைக்கப்படும்
கண்ணால்..

இதழ்கள்
படாமல்
காயப்படாமல்..
கத்தியும் படாமல்...
கட்டியணைக்காமல்..

ஏன் கவியே இல்லாமலும் கூட..
கற்பனையில்..

உன்
முகம் பார்க்கையில்
துள்ளி குதிக்கும்
என் பெண்மைக்கு
உன்
இதழ் கொண்டு
சொல்லி
புரியவை....
காதலை கவியாய் புரிபவன் நீ என்று...

77.

உன்னை
நான்
ஒழித்து வைத்திருக்கும்
என் இரகசிய அறையை
கண்டுபிடித்து
விட்டாய் போல..

நீ
அருகில் வருகையில்
தானாகவே
என் மரைப்பு
உன்னை நோக்கி சரிகிறது..
தடுமாறுகிறது..

பசலை நோயில்
என் பழமனம்
பருகிட
நீ வா...அவசரம்..

78.
இயற்கை

நம்மை இயக்கும் கை..

காற்று பூமி வானம்
இவை மூன்றும் செய்யும் காதல் மழை...இயற்கை..

வானின்
நீலகண்கள்
அவை கட்டியணைத்த
இரவுகள்.. இயற்கை..

அன்னை மடியில்
பாலும்..அதை
குடிக்க 
பிறந்த நாமும்..இயற்கை..

சுற்றும்
பூமியாவும்
உடல் சுட்டெரிக்கும் 
காதல்...இயற்கை..

எந்த நொடி
எப்போது முடியும் என்ற
கணிதமேதை காலம்..இயற்கை..

பாட்டி
சுட்ட வடையும்..அதில்
கிடைக்க செய்த
சுவையும்..இயற்கை..

என்னை உன்னை
நாளும்
வந்து வாழ வைக்கும்
பாசம்..இயற்கை..

79.
அவன்
மூச்சுக்காற்றின்
இடைவெளிகள்
முத்தமிட்டு
புன்னகைக்கும்
என் அதிகாலை மலர..
இரவு உதிர்ந்த 
பூக்களின்
வாசனைகளின் 
வடிவமாக 
அவன் குரல்..
ஹேப்பி மார்னிங் டார்லிங்..

80.

இந்த
பசி நேரத்தில்
அவன் முகம்
என்னை பசியாற்றி
போகிறதே..
என்ன செய்வேன்..

அவன்
முகம் பார்க்கும்
நேரத்தில்
என் இதழ்கள் குவிந்து
ஒன்றை ஒன்று மல்லுக்கட்டி..
தேனுக்கு சண்டையிட்டு
ஊண் குளத்தை
நிரப்புதே..

81.

அவளோடு காதலில்
இசைக்கும் இதயத்தின்
இசையை பதிவிறக்கம்
செய்ய..

அவள் இதழ்களிடம்
நான் கேட்கும்
ஒப்புகை எழுத்துக்களே..
என் முத்தம்..
இருவரிகளில்..சுவையாக..

அவள் 
என் கைகளை தொட்டு
கையெப்பமிடுவாள்..அவள்
இடையில்..

பதிவிறக்க.

82.

ஒரு கண்டாங்கி சேலையும்
கட்டிலும்...

காதலை வென்ற
கவிதைகளை வடிக்க
அவனுக்கு நான்
தேவையாம்..என்னை
கட்டிலில் அமர்த்தி
என்னைப் பார்த்து..

கவிதை எழுதினான்..

....

கருப்பு கண்ணழகா..
தாலி கட்டிய நான் அழகா..

உடுத்திய உடை அழகா..அதை
வாங்கி தந்த நான் அழகா..

பப்பாளி பழ இதழ் அழகா..அதை
பாலிஸ் போட்ட லிப்ஸ்டிக் அழகா..

கிறங்கவைக்கும் கண்ணழகா..அதில்
இரங்கல் கவி எழுதிய நான் அழகா..

(லைட்டா..எனக்கு கோபம்)

இருமாராப்பு புத்தகம் அழகா..அதை
பதிப்பித்த நான் அழகா..

இடைவெளிகள் அழகா..அதில்
விளையாட்டு திடல் அமைத்த
நான் அழகா..

பாதத்தில் கொலுசு அழகா..அதை
வாங்கி தந்த நான் அழகா..

.(.எனக்கு செம கோபம்...)

இப்ப என்னடா..சொல்ல வருகிறாய்..

(இதற்கு அவன்..)

..இந்த கோபம் அழகா..அதில்
கொலையாக போகும்
நான் அழகா...

எனக்கோ..
என்ன சொல்ல..
புன்னகையை தவிர...

அப்படியே அவனை
கட்டிக்கொண்டேன்..அவன்
கவிதையை விட
அவன் மனது தான் அழகு..

83.
எனக்கு...
கண்ணில்
தூசி படர வருவதும்..

அவன் மூச்சுக்காற்று
பட்டால் வருவதும்..

மட்டுமே காதலல்ல..

தூரத்தில் இருந்தாலும் அவனை
நினைக்கையிலே
இதயம் ஒரு நொடி
துடிக்க மறந்து

நம் நினைவு தப்பும்..அதுவும்
காதல் தான்..

84.

என்
இமைகளை வருடிட ஒருவன்...

கூந்தலை கோதிட ஒருவன்..

இருவரி கவிதைகள் 
படித்திட ஒருவன்...

மூச்சுக்காற்றை
முகத்தில் வாங்கி
மூச்சடக்க ஒருவன்...வேணும்...
கண்ணா அது 
நீயாக..மட்டுமே..
வேண்டும்..

சீக்கிரம் வா..
சீர்கெட்ட என் ஆசை ...
சீர் கொடுக்க தயார் தான்..
ஊர் கெட்டு கெடக்குதடா....
ஊர் மெச்ச வந்திடடா..

கால்களின் கொலுசு சத்தம்..
அவனிடம் காதலை சொன்னதாம்..
என் வாய் வார்த்தையில்
உண்மையில்லையாம்...

உன் மனதை கேட்டுச்சொல்
என்கிறான்...என்னிடமே..

என்னையே கவிழ்க்க பார்க்கிறான்..
என்ன சொல்ல....

சொல்லி வைத்தாற்போல்
தெருமுனையில்
ஒருவன்...

பேருந்து நிறுத்தத்தில்
ஒருவன்...

பேருந்தினுள் ஒருவன்..

அந்த சில்லறை காரனும்
அதில் ஒருவன்...
என்ன செய்ய..

என் கண்கள்
என்றாவது ஒருநாள்
என்னையும் அறியாமல்...
இசைந்து விட்டால்..
என் கற்பு என்னாகும்...

அன்று
அந்த பள்ளிகூட நாட்களில்...
காற்றுவாங்கும்
உன் அரைகால் சட்டையில்...
நான் இட்ட காதல் கடிதங்களை
நீ மறந்துவிட்டாயா..

அந்த இளந்தை பழத்தை
நான் கடித்து 
தந்தால்தான் 
சுவை கூடும் என்பாயே..அதையும்
மறந்துவிட்டாயா...

பரவாயில்லை... நான்
கன்னித் தாவணியாய்
பதவியேற்கும் வேளையில்...
அந்த பச்சோலை கூண்டுக்குள்
நானிருக்க..

இரவு கூடும்
வேளையில் நீ வந்து
என் உயிர் கூட்டிப் போனதை
மறந்தாயா...

என் மாராப்பில் நீ சாய்ந்து
மறவாதே..கண்மணி..
என்று என் கன்னத்தில்
முத்தமிட்டு ஓடினாயே..
திரும்பி ஏன் வரவில்லை..

முதல் காதல் நினைவுகள்
முக்தி அடையும் வரை
வருமடா..
தீரா நோயடா..
இந்த முதல் காதல்..

வா..வந்து விடு...
இல்லையேல்
உன் குழந்தைக்கு 
என் பெயர் வைத்து 
வளர்த்து விடு...

உன் காதலை..

85.

அவன்
எழுதிய
அனைத்து
காதலையும்
ஊடலையும்
கூடலையும்
கவிதையாக்கி
புத்தகமாக வெளியிட்டேன்..

அதற்கு பெயரும் வைத்தேன்...

என் மகன்..

86.

எப்படி
தேனீக்களாகும்
என்
இதழ் 
தீண்டா..
வண்டுகள்.. 

________________________

ஒருவன்
இருக்கிறான்.. என்னை
அடி முதல் முடி வரை
அனுஅனுவாய் ரசிப்பான் ...அவன்
இதழ் கொண்டு வாசித்தே
ருசிப்பான்.. 

என் பழம(ர)(ன)ம்
கனியுமாரு
கவிதையிலும்
காதலிப்பான்....

நான்
எட்டடி வைத்தால்
பதினோரு அடியில்
என்னை விரல்களால்
தொட்டு பாராட்டுவான்..

நான் கொடுக்க மறந்து விட்ட
சுவையை
அவன் சுவையாக்குவதில்
வல்லவன்...

என்னவன்
இதை
படித்துக் கொண்டிருப்பான்.(ர்).

நானே அவனில் வாழும்
கன்னி கவிதைப் பெண்ணாள். ...

87.

உன்
மூச்சுக்காற்று
உன் மீசையோடு சேர்ந்து
என் பின் கழுத்தில்...
பதியமிடும் வாசனை
பொழுதுகளில்
உன் கேள்விக்கு
பதிலாக..
என்
வெட்கத்தையே பரிசளிக்கும்..

என் பெண்மை..

ஆற்றிடை
வெள்ளம்போல்...
அவன் கூடல்..
களிப்பு..

88.

நீ
தீண்டா
சந்தனம்..வெறும் கட்டையாகும்..

நீ
உடுத்தா 
உதடுகள்.. வெறும் சதையாகும்..

நீ
தொடா
இடைகள்..வெறும் கொழுப்பாகும்..

நீ
கொட்டி முழங்கா
என் மத்தளம்..வெறும் தோலாகும்..

நீ
இல்லா..
என் பள்ளியறை...பாலைவனமாகும்..

பரமனே... வா....
ஆவினது பால் பாழாகும் முன்..

89.

என்
கவிதைகளை
புத்தகமாக..
வெளியிட விரும்பி
என் காதலனிடம் உதவி கேட்டேன்..

அவன் இதழ்களில் அச்சிட்டு
இடைதனில்
வெளியிட்டான்...
படித்தும் பார்த்தான்...
அச்சுப் பிழை இல்லவே இல்லை..

90.

வரி வரியாய்
நீண்டநேரம்
கவிதை படிக்க
தோன்றினால்...
என்னவனின்
ஒரே விருப்பம்..

என் இதழ்களை தவிர வேறில்லை..

91.
நீ 
பூக்களை சூடுகையில்
கொலையும்
தற்கொலையாகிறது...

நீ
புடவை உடுக்கையில்
பூமிப்பந்து
பூப்பந்தாகிறது..

நீ
இதழ் சமைத்து முடிக்கையில்
சைவம்
அசைவமாகிறது..

நீ
கண்மூடி வணங்குகையில்
கோவில் சிலைகளுக்கு
கோபம் வருகிறது...

நீ
நீராடி முடிக்கையில்
நீருக்கும்
நாணம் வருகிறது..

நீ
கடக்கும் சாலையில்
காதலும்
பிச்சையாகிறது..

நீ
கசக்கிய
என் மனமே...
உன் சுவாசத்தால்
வாழ்கிறது...
93.
முகத்தில் குளம் சமைத்தாய்
குறுநகையால் வளம் நிறைத்தாய்
வார்த்தைகளில் புள்ளி வைத்தாய்
மனசுக்குள் கோலமிட்டாய்

மனதோடு மழைக்காலம்
நீ நடைபயிலும் அந்நேரம்
நிலவும் குளிர்காயும்
நீ  மலரும் நிலாக்காலம்..

பூவுக்கும் ஆசைவரும்
நீ பறிக்க தவமிருக்கும்
நீ சூடும் பூவெல்லாம்
புன்னகைத்தே மரணிக்கும்..

மலரே உன் பாதச்சுவடு
மயானமானால்
மரணம் கேட்டு மனம் ஏங்கும்
அதற்காக 
மனம் கொத்தி அது மரணிக்கும்....

எமன் வந்து தடுத்தாலும்
எழுதுறத நிறுத்த மாட்டேன்
எனக்கு எழுதுபொருள் நீதானே
எழுத்தாய் என்னவளே நீதானே...

94.
அர்ச்சனை பூக்கள் 
உன் இதழ் உதிர்த்தலில் 
மலரும் மனம் குளிரும்..
இருவரி தீண்டிய இசைவுகளை
இருதயம் சேமிக்கும்..

இமைகொத்தும் நேரங்களில்
நாளங்களில் உதறலெடுக்கும் 
உள்ளம் உருகத் தொடங்கும்
உயிர்ப்பை வார்த்தையாய் கேட்கும்...

உதடோரம் நடுங்கும்
நாணமாய் இமை மூடும்
இதழ்மூட அனுமதி வேண்டும்
இது காதல் தருணம்..
காதலர் கலக்கும் தருணம்..

95.
நெஞ்சுக்குள் உருவாகி
உணர்வோடு உயிர் சேர்த்து
கள்வர்கள் கணம் நோக்கி
கண்ணுக்குள் காதல்  தேக்கி
காற்றை கரம் விலக்கி
கைரேகை தடம் பார்த்து
கண்ணிமை மூட
காரணமாகும்
சத்தம்..

முத்தம்..

96.
அன்பே
என்மேல்
கோபமா...

நீ
படாமல்
விலகியிருக்கும் நேரம்..
பரிதவிப்புடன்
காத்திருக்கிறேன்..
நீ
என்னை தொட..
உன் தோழியுடன்
சேர்ந்து..
தாகம் தீர்க்க..
வறட்சி நிலமாய்...

நீ
மேலே
நான்
கீழே...

இதழ்கள்..

97.
அவனில்லை
என்னோடு
உயிரோடு
என்ற உண்மையை
தெரிந்து கொண்டு..

என் 
உடல் பற்ற நீ
திட்டமிட்டால்..

உன்போலொரு முட்டாளை
இவ்வுலகம்
கண்டிராது..

என்னவனின்
உடல் மட்டுமே
இங்கில்லை..
அவன் கொடுத்த
உயிர்
என்னுடனே தான்
இருக்கிறது...

அவனுக்கும்
என்போல்
கோபம் வந்தால்...
பாவம் நீ..
தாங்க மாட்டாய்..

ஓடி விடு...

கூடல்
பசியாற மட்டும்
உனக்கு பால் மடி
தேவையென்றால்..

உன் தாயிடம்
சொல்வாயா...
இந்த இச்சையை...

இம்சை தானடா..
கூடல் நோவு..
நீ உன்னை நம்பும் ஒருத்திக்காக
காத்திரு..
அதுவரை
என் கதவுக்கு வெளியே இரு...

ஜாக்கிரதை..

98.
கடலில்
மூழ்கி
மூச்சடக்கி
முத்துகுளிப்பது..
இத்தனை இன்பமா..என்ன..

நான் அவன்
என்னை முத்தமிடுகையில்
உணர்ந்தேன்..
எங்கள் காதல் கடலில்
மூழ்கையில்..

99.
கொஞ்சம்
கருணை காட்டடா..கண்ணா..
உன் பார்வை பட்டே
பாதி உடல் மெலிந்தேன்..

உன் 
இமைகளில் தான்
தினம் நீராடினேன்..

உன்
சிகை களைய
கண்ணீர் விட்டேன்..

உன்
ஆடை தீண்டும் காற்று பட்டே
ஆசையில் வெந்தேன்...

உன்
நிழல் என்னை தீண்ட
நான் காதலை பிரசவித்தேன்..

பரிகாசம் செய்யாதேடா - உன்
மேனி தினம் என்னை
தீர்க்கிறது - என்
முகம் மறைந்து மறைகிறது..

உன்
வியர்வை பட்ட 
துணியால் ஒருமுறை
தடவிப்போ...நான்
பார்வை கொள்வேன்...
உன்னை  பருகிடுவேன்...

நான்
உன் கண்ணாடி காதலி..
கஞ்சனை

(கஞ்சனை - கண்ணாடி)

100.
நீ படிக்க மறந்த 
என் கவிதைகள் பாவமடி..
நான்  பாவியடி..

உன் கோவை இதழ் பூவடி..
என் கவி மணக்கனும் தானடி..
உன் இருவரி தந்தே
வாசனை கூட்டிப்போவேன்டி.....

உன் பார்வை தீண்டாமல் 
பசியில் தேடுது...உன்

இதழ் சுழித்தே  சுவைக்காமலே 
இதயம் சுருங்கியே போனது..

இருவரிக் கவிதைகள் 
இம்சையை
இரவல் கேட்குது..

இதழ்வழி ஏச்சுக்கள்
பொருள் இல்லாமலே போனது...

தோன்றிய கற்பனைகள்
தொடராமல் போனது....
மூடிய  சுவைகள்
முடிச்சுக்களை அவிழ்க்கவே ஏங்குது..

எதுகை வேண்டும் 
மோனை வேண்டும்
என் கவிதைகளில் நீ கூட வேண்டும்...

காதல் இன்றி நானும் இல்லை 
காதலை விட்டே 
தூரம்போக
விருப்பமில்லை..

கொஞ்சலாய்
கெஞ்சலாய்
காமத்தை தூரம் தள்ளி வைப்போம்..
கட்டில் குழந்தையை
தூங்கவைப்போம்..
தொட்டிலை தூக்கியே
மார்பில்
கட்டிவைப்போம்...

காரிருள் நேரத்தில்
காதலை மட்டும் விட்டு வைப்போம்..
நம் காதோடு சொல்லிவைப்போம்..

கனவுகளும் வேண்டாமடி
கன்னத்தில் முத்தமிட்டு 
கற்பனை மட்டுமே
செய்து வைப்போம்..

முத்தம் இன்றி போனாலடி..
என் உயிர்
சத்தமின்றி போய்விடுமே...

என் சாதனைகள் 
உன் கன்னக்குழியில் இடம் கேட்டே
போராடியே 
உயிருக்கு துடிக்குதடி...

கண் முடிகள் காணுமடி
காதலும் வாழ ஏங்குதடி..
காதல் கொடி படர்ந்தடி..அது உன் கொடி இடை கேட்குதடி...

கொடிகளில்  பூத்த
காய்கள் பெருத்தே
என் கண்ணை திண்ண பாக்குதடி...
காதல் இன்றி நானும் 
தண்ணீர் இல்லா மீனும் 
விக்கலில்..என்
காதல் உன் விழிமுனை
சிக்கலில்....

தாவணியே
தாடகையே
மறுமொழி பேச்சு வேண்டாம்...

நீ கடத்தும்
கடக்கும் 
மாதங்கள் வேண்டாமடி...
நாட்களும் நீளுதடி...

ஆடி முத்திரையும் 
ஆவணி முகூர்த்தமும்
பாதைக்கு தெரியுமோ..
பாதை தேடும்
பயணம் செல்ல
ஏங்கும்..என்
பசிக்கு தெரியுமோ....

சித்திரையும் முத்திரையும் 
உன் பார்வை படவே காத்திருக்கும்....

பூக்களே உயிர் பெறுங்கள்
வார்த்தை வாசனையால் 
என்னை தின்னுங்கள்...

உன் உள்ளத்தில்
கள்ளமும் வேண்டாமடி...
கவி எழுத
கண்ணதாசன் வேண்டாமடி.. அந்தக் கம்பனும் வேண்டாமடி...
வார்த்தைக்கு வார்த்தை உன்னை வர்ணித்தே 
வகுப்பெடுக்கும்
வைரமுத்து வேண்டாமடி..

நானோ
வார்த்தைகளுக்கு உள்ளே 
உன்னை வகைப்படுத்த போகின்றேன்..

வகிடுக்கு  நடுவே உன்னில் வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்...

காதலில் கொல்லாதேடி..
காதல் இசைந்தபின்
காமம் பொல்லாதேடி...

என் கண்ணிமை தள்ளாதேடி
தவறே..தவமே...
தாவணிப்புறமே...
அழகே...அருகே..
அறிவியல் பாடமே....

அடங்கா அவய ஆழியே
ஆசைக்கு என் உயிரே
கூலியே...

குடமுழுக்கு செய்த
குமுதமே...
குங்கும சந்திப்பே..
குரை காண இயலா
குற்றமே...உன்னை
படைத்தவன் செய்த
பிழையே...என்னைக்
கொன்றது
அவன் படைப்பு கலையே....

பஞ்சத்தில் குஞ்சம்
உன் இடையில்
இடம் கேட்டே
தஞ்சம்...

கேரள பலாவோ...
மறைத்த நிலாவோ...
தூரிகைகள் வரைந்தே மறைத்த
காவியமோ...கற்பனையில்
கஞ்சமோ...இல்லை..
வார்த்தையில் பஞ்சமோ..
உன்னை வர்ணிக்க...

வார்த்தை தேடி
தமிழை கல்லெடுத்தே
எரிகிறேன்...காய்த்த
தமிழ்மரத்தை 
பழம் விழவே பார்வையில்
குறிவைக்கிறேன்...என்
இமைபட்ட இடத்தை
கவிதையாய்
கவனமாய்
குறிவைத்து எறிகிறேன்..

விழாமலா
போகும்...?

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.