பால்காரியின் கோரிக்கை நிறைவேற, அவள் சாஷ்டாங்கமாக விழுந்து பகவானை வணங்குகிறாள்
தொகுத்தவர்-ரா.வேங்கடசாமிk
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு வயதான பால்காரம்மா.
கஞ்சிபுர நகர்வாசி. அவருக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். ஒரு தடவை பால் வியாபாரத்திற்காக அவள் ஒரு புது பசுவை வாங்கினாள். அதிகமாகப் பால்தரும் பசு அது. வாங்கின தினம். மாட்டிற்குச் செய்யவேண்டிய பூஜைகளை எல்லாம் ஒழுங்காகச் செய்த பின்னர் முதன் முதலாக அந்த மூதாட்டி பாலைக் கறந்தாள் பால் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது.
புதிய பாத்திரத்தில் பாலை நன்றாகக் காய்ச்சி, இன்னொரு புதிய பாத்திரத்தில் ஊற்றி எடுத்துக் கொண்டு நேராக மடத்திற்கு வந்தாள்.மகானுக்குக் கொடுக்க வரிசையில் நின்ற அவளைக் கவனித்த சிப்பந்திகள் அவளை எச்சரித்தார்கள்.
"மகான் இதையெல்லாம் சாப்பிட மாட்டார்" என்று அவளிடம் சொன்னார்கள்.
அதையெல்லாம் அவள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. தான் வணங்கும் தெய்வத்திற்கு பாலை எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்பது அவளது பிடிவாதம். மகானின் அருகில் இருந்த சங்கர மடத்து ஊழியர்களும் பேசாமலேயே சைகையில் அவளை விரட்டினார்கள். அப்போதும் அசையவில்லை. மகான் முன் வந்து பாலை வைத்தாள்.
மகான் அவளை நிமிர்ந்து பார்த்தார். அவள் முகத்தில் தெரிந்த பக்தி உயர்வு அவருக்குப் புரிந்தது. "வேண்டாம்" என்று கை பிசைத்த ஊழியர்களையும் ஒரு தடவை பார்த்தார்.
பிறகு செம்பை எடுத்துப் பாலை பருகுகிறார். பிறகு "ரொம்ப ருசியா இருக்கு" என்றார்.
பால்காரியின் கோரிக்கை நிறைவேற, அவள் சாஷ்டாங்கமாக விழுந்து பகவானை வணங்குகிறாள்