எந்த விஷயத்தைப் பற்றிப் பெரியவாளிடம் பேசி உத்தரவு பெறலாம், என்று எண்ணிக் கொண்டு வந்தாரோ, அதே விஷயத்தைப் பெரியவாளே- விஸ்தாரமாகப் பேசி ஆக்ஞையிட்டுவிட்டார்.
பெரியவா உத்தரவுப்படியே செய்த லால்குடிகாரர்.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு வரகூரான் நாராயணன்.
தோற்றத்திலிருந்தே இவர், அமெரிக்காவிலிருந்து வந்தவர் என்று புரிந்து கொள்ள முடிந்தது.
நமஸ்காரம் செய்தார்.
"யாரு? ஸப்தரிஷியா?"--பெரியவா
"ஆமாம்"-வந்தவர்.
"அத்தை பெயர் ஸ்ரீமதியா? அவள் சௌக்கியமா இருக்காளா?"--- பெரியவா.
"இருக்கா"---வந்தவர்.
"மாந்துரையானைத் தரிசனம் பண்ணிட்டுத்தான் வந்திருக்கியோ?"---பெரியவா.
"ஆமாம்.."---வந்தவர்.
"ஊர்ல உங்க க்ருஹம் இருக்கா?"----பெரியவா.
"இருக்கு..."----வந்தவர்.
"நீ அமெரிக்கா போய் அஞ்சு வருஷமாச்சா?"---- பெரியவா.
"ஆமாம்..."-----வந்தவர்.
சற்று மௌன இடைவெளி.
"உங்க ஊர்ல ஸப்தரிஷிகள், பூஜை பண்ணின ஸ்வாமி இருக்கார். காவேரி தீரம். நல்ல முரட்டு மழநாட்டுப் பிரஹரசரணப் பிராமணர்கள். நீங்க..?"---பெரியவா.
"பிரஹசரணம்னா.. நல்ல ஆசாரம் உள்ளவர்கள்னு அபிப்ராயம்"--- வந்தவர்.
"ஊரை விட்டுட்டு எங்கோ....அமெரிக்கா போய்ச் சம்பாதிக்கணுமா?. உன் தாத்தா, கொள்ளுத் தாத்தா எல்லாம் நல்ல வைதிக சிரத்தை உள்ளவா. அமெரிக்கா போய்ச் சம்பாதிக்க வேண்டுமா?"
"இருக்கும் சொத்துச் சுகங்களை வைத்துக் கொண்டு, உன் கிராமத்திலேயே இருக்கலாம். திருச்சியிலே ஸ்வாமி தரிசனம் பண்ணிண்டு இருக்கலாம்..."-----பெரியவா.
லால்குடி(அமெரிக்க)காரருக்கு. மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.எந்த விஷயத்தைப் பற்றிப் பெரியவாளிடம் பேசி உத்தரவு பெறலாம் என்று எண்ணிக் கொண்டு வந்தாரோ, அதே விஷயத்தைப் பெரியவாளே விஸ்தாரமாகப் பேசி ஆக்ஞையிட்டு விட்டார்.
"பெரியவா உத்தரவுப்படியே செய்யறேன்..."--- லால்குடிகாரர்