Breaking News :

Monday, May 05
.

ஸித்தி அடைந்த நாளில் அமெரிக்கருக்கு தரிசனம் - காஞ்சி பெரியவா


பெரியவா ஸித்தி அடைந்த நாளில் (08-01-1994) ஒரு அமெரிக்கருக்கு கொடுத்த தரிசனம்.

அந்த அமெரிக்க பேராசிரியர் ராபின்சன் சொல்கிறார்.

"அன்றைய தினம் எனக்கு மகாபெரியவா தரிசனம் கொடுத்து, Good-bye என்று மூன்று தடவை சொல்லி கையை அசைத்துவிட்டு மறைந்தார்.. இந்தச் செய்தியை எங்கள் ஊரில் யாரிடமாவது சொன்னால், அவர்களால் புரிந்து கொள்ளக்கூட முடியாது.அதனால் இது குறித்து யாரிடமும் கேட்க முடியவில்லை" என்று.நாத்தழுதழுகக்  கூறினாராம்.
கட்டுரையாளர்-டாக்டர் பத்மா சுப்ரமணியம்
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

அமெரிக்காவிலுள்ள - தென் கரோலினா பல்கலைக் கழகத்தின் கவர்னர், பேராசிரியர் ராபின்சன். அவர் கிரேக்க வேதாந்தத்துறையில் தேர்ச்சி பெற்றவர்.
அமெரிக்கா பல்கலைக்கழங்களிலிருந்து, பல துறைகளைச் சேர்ந்த  ஆசிரியர் குழு சென்னை வந்தது.

நான், ராபின்சனிடம் "நீங்கள் காஞ்சி சென்று பெரியவரை தரிசிக்க வேண்டும்"

என்றேன்.அவ்வளவு தான்! அவர் கண்கள் மலர்ந்தன. அவர் அன்று காஞ்சி சென்றுவந்த விந்தையான கதையைச் சொன்னார் காஞ்சியில் சிறு சிறு குழுவாகப் பிரிந்து சென்றார்களாம். சங்கரமடம் பற்றியோ, பெரியவர்களைப் பற்றியோ ஒன்றும் தெரியாது. ராபின்சனுடன் மற்றும் இருவர் சங்கரமடத்தின் வாசலுக்கு எதேச்சையாக வந்தனர் கோவில் என்று உள்ளே நுழைந்தனர்.

அங்கே நடந்ததை அவரே கூறுகிறார்;

"ஓரு கயிற்றுக் கட்டில் போல இருந்தது. அதில் வயது முதிர்ந்த ஒருவர் அமர்ந்திருந்தார் ஒரே கூட்டம். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. திடீரென ஒரு பையன் எங்களிடம் ஓடி வந்தான்."நீங்கள் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டான். வியப்போடு, 'ஆமாம்' என்றோம்.

எங்களை யாருக்கும் அங்கே தெரிய வாய்ப்பே இல்லை. அடுத்த கேள்வி எங்களை திக்குமுக்காடச் செய்தது. 'உங்களில் யார் பேராசிரியர் ராபின்சன்? அவரை மட்டும் அழைத்து வர உத்தரவு" என்றான்.
வேதாந்தம் கற்றுத்தரும் பேராசிரியர் ராபின்சன் மட்டும் உள்ளே சென்றார்.

"பெரியவரைப் பார்த்தேன். அருகில் அமரச் சொன்னார். அவ்வளவுதான்! அதற்குப்பின் காலம்(நேரம்) கடந்தது தெரியவில்லை.!" என்று சொல்லி அதற்குமேல் பேசமுடியாமல் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். சொன்னவர் கண்டதில்லை, கண்டவர் சொன்னதில்லை, என்பதைப் புரிந்து கொண்டேன்.

(இதே ராபின்சன், 1994 ஏப்ரல் - மே மாத வாக்கில், அலுவல் நிமித்தமாக சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் வந்து, டாக்டர் பத்மா சுப்ரமண்யத்தை தொலைபேசியில் அழைத்து, "மஹா பெரியவாள் சௌக்கியமாக இருக்கிறாரா?" என்று விசாரித்தார்.
ஸ்ரீ சுவாமிகள் சித்தி அடைந்து விட்டதாகக் கூறப்பட்டதும், Is it on 8th or 9th என்று கேட்டிருக்கிறார்.

"அதெப்படி, அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்?" என்று வினவியிருக்கிறார், டாக்டர் பத்மா.

"அன்றைய தினம் எனக்கு மகாபெரியவர் தரிசனம் கொடுத்து, Good-bye என்று மூன்று தடவை சொல்லி, கையை அசைத்து விட்டு மறைந்தார்.

இந்தச் செய்தியை எங்கள் ஊரில் யாரிடமாவது சொன்னால், அவர்களால் புரிந்து கொள்ளக்கூட முடியாது. அதனால் இது குறித்து யாரிடமும் கேட்க முடியவில்லை' என்று, நாத்தழுதழுக்கக் கூறினாராம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub