Breaking News :

Friday, May 02
.

கேரளா கலாச்சாரம் எப்படி உருவானது?


கேரள வரலாறு என்பது இந்திய வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது. கற்காலத்தைச் சேர்ந்த எடக்கல் குகைச் செதுக்கல்கள் குறைந்தது கி.மு 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இது இந்தப் பிராந்தியத்தில் இருந்த வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய நாகரிகம் அல்லது குடியமர்வைக் குறிப்பதாக உள்ளது. கி.மு. 3000 க்கு முன்பிருந்து, கேரளம் மசாலை வர்த்தகத்தில் ஒரு முதன்மை மையமாக உருவானது.

மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் துறைமுகங்கள் வழியாக அரபிக் கடல் கடந்து கேரளம் தூர கிழக்குநாடுகளுடன் நேரடி வணிகத் தொடர்பில் இருந்தது. மசாலை வர்த்தகத்தில் முதன்மையான பகுதியாக உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இடையே கேரளம் இருந்தது. வரலாற்றில் கேரளாத் துறைமுகங்கள் மிகப் பரபரப்பான துறைமுகங்களாக (முசிறி) உலக வரலாற்றில் அனைத்து வர்த்தக மற்றும் பயணப் பாதைகள் மத்தியில் இருந்துள்ளன.

கேரளம் என்ற சொல் முதலில் பதிவு செய்யப்பட்டது (கேரளப்புத்ரா என்று) கி.மு 3 ஆம்-நூற்றாண்டைச் சேர்ந்த மௌரிய பேரரசின் பேரரசர் அசோகரின் (கி.மு 274–237 ) பாறைக் கல்வெட்டில் ஆகும். கேரளபுத்திரர் (சேரர்) என்பவர் மௌரிய பேரரசுக்கு உட்படாமல் தென்னிந்தியாவில் இருந்த நான்கு தனி அரசுகளில் ஒன்றின் மன்னர்களாவர்.

பிற தனியரசர்கள் சோழர், பாண்டியர், சத்திய புத்திரர் ஆவர். சேரப் பேரரசு அருகிலிருந்த பேரரசுகளான சோழர் மற்றும் இராஷ்டிரகூடர் ஆகியோரின் தொடர் தாக்குதலினால் வீழ்ச்சியடைந்தது. 8 ஆம் நூற்றாண்டில், ஆதி சங்கரர் நடு கேரளத்தில் பிறந்தார். இவர் இந்தியத் துணைக்கண்டத்தில் பயணித்து, அத்வைத மெய்யியலைப் பரப்பினார். 1498 இல் வாஸ்கோ ட காமாவின் வருகைக்குப்பின், ஐரோப்பியர்களின் காலனித்துவம் மற்றும் தங்கள் சொந்த நலன்களுக்கு இடையிலான போராட்டங்கள் எழுந்தன.

இதன் தொடர்ச்சியாக 1795 இப் பிராந்தியம், பிரித்தானியர்களின் ஆளுகைக்குள்ளானது. விடுதலைக்குப் பிறகான காலத்தின்போது 1956 ஆண்டு முன்னாள் மாகாணங்களான திருவாங்கூர்-கொச்சி, சென்னை மாகாணத்தின், மலபார் மாவட்டம், தென் கன்னடத்தின்காசர்கோடு வட்டம் ஆகியவற்றை இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது.

கேரளம் குறித்த தொன்மக் கதைகளில் பல, இந்தியாவின் வேத கதைச்சொல்லல் வரலாற்றில் இருந்து வரும் பொதுவான கதைகளாகும். அதே நேரத்தில் கேரளம் எப்போதும் சமஸ்கிருதம் மற்றும், தமிழ் பண்பாட்டின் கலவையாக இருந்துள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.