காதலிக்கு பிறந்தநாள்..
இன்று
உனக்கு பிறந்தநாள் - என்
உலகம் பிறந்த நாள்..
உடல் பிரிந்த உயிரொன்று
உருக்கொண்ட நன்னாள்.
உலகம் நான் காண
உருவான பொன்னாள்..
பூவே உன் சுவாசம் தாங்கி
பூமிப்பந்து சுழன்ற நாள்..
பூவோடு மரங்களெல்லாம்
பூவையோடு பிறந்த நாள்...
கண்மணியே..(உன் மூச்சு)
காற்று தொட்ட காகிதம்
கமலமாய் மலர்ந்த நாள்..
காதோரம் குயிலொன்று
காதல் இசைத்த நாள்..
முத்தத்தின் வாயிற்படி
முதல் முறை அழுத நாள்..
முழுநிலா கவிதைக்கு
முன்னுறை பதித்த நாள்...
கம்பனும் காளிதாசனும்
கற்பனை தொலைத்த நாள்...
கற்பனை கருவொன்று
கண்விழி திறந்த நாள்....
கோடிக் கண்களே நீங்கள்
காத்திருங்கள்...
என் காதலிக்கு
இன்று
பிறந்த நாள்....
கோடிப்பூக்களே உடல் கொடுங்கள்
உங்கள் உயிருக்கு இன்று பிறந்தநாள்...
உயிரிரண்டு உடல் கண்டு
உருமாற்றம் கண்ட நாள்..
உயிரை நான் காணும்
கருவரை திறந்த நாள்..
காரணமாய் கண் கொண்டு
என் காதலி பிறந்த நாள்...
.. இயலிசம்...
.
காதலிக்கு பிறந்தநாள்..

.