அது சேருற இடத்தை பொறுத்து தான் அதனோட அழகு தீர்மானிக்கப்படுது…
நல்லா புரிஞ்சிகிட்ட காதல்ல சண்டை, வாக்குவாதம் இது எல்லாமே இருக்கும்…
முக்கியமா அன்பு அதிகமாகும் போது, இயல்பாவே பொஸஸிவ்னெஸ் ஓவர்லோட் ஆகும்…
அப்போ நம்மள மீறி அவங்களை கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சிடுவோம்…
இதெல்லாம் உண்மையான அன்பில், காதலில் இயல்பு தான்…
ஆனா, அவங்களை யார்கூடவும் ஒப்பிட்டு பார்க்கவோ, பேசவோ கூடாது…
நாம நாமளா இருக்கணும், அவங்களையும் அவங்களா இருக்க விடணும்…
மூச்சு முட்டுற அளவுக்கு இறுக்கி பிடிச்சி வெச்சுக்குறது இல்ல லவ்,
நம்மள விட்டு போகாத அளவுக்கு நம்பிக்கை கொடுக்கணும்,
அவங்க மேல நாமளும் அதே நம்பிக்கையை வைக்கணும்…
சண்டை வராம இருந்தா, அது காதலே இல்ல…
ஆனால், அந்த சண்டையிலும் நிறைய லவ் இருக்கணுமே தவிர, ஈகோ இருக்க கூடாது…
முக்கியமா ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கணும்…
அவங்கள அவங்க இயல்போட ஏத்துக்கணும்…
நீ!
நான்!!
இனி நாம்…!!!