பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.
பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.
பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.
பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.
பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
" மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.
பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.
மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் , எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.
ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.
கோமாதாவை காப்போம் , நேசிப்போம் , பூஜிப்போம்
கோமாதாவுக்கு விக்கிரகம்... இன்று 16/1/2024 செவ்வாய்க்கிழமை நமது கோமாதா பூஜை தின வாழ்த்துக்கள் இனியஉழவர் திருநாள் வாழ்த்துக்கள் ! சிவசிவாய சிவசிவாய
கோவை பீளமேடு பகுதியில் கோமாதாவுக்கு விக்கிரகம்... சிறப்புகள் என்னென்ன?பசுவின் உடம்பில் அனைத்து விதமான தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும், நவகிரகங்களும் குடியிருப்பதால், கோபூஜை செய்யும் பொழுது அனைவருடைய பரிபூரணமான அருளும் நமக்கும் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன” என்பது உண்மை
கோவை பீளமேடு புதூர் அருள்மிகு மாரியம்மன் பாலமுருகன் கோயிலில் நந்தினி உடன் உறை கோமாதா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தொன்மை காலம் முதல் மனிதனின் வாழ்க்கைநெறியோடு இணைந்த கால்நடைச் செல்வங்களில் ஒன்று பசு. பசுவை கோமாதா எனப் போற்றிக் கொண்டாடுகின்றன ஞான நூல்கள். பசுவை அதிகாலையில் பார்ப்பதும் வணங்குவதும் புண்ணியமாகும். வீட்டில் பசு இல்லாதவர் அன்றாடமும் ஒரு வேளையாவது ஏதாவது ஒரு பசுவுக்கு அறுகம்புல்லோ, வாழைப் பழமோ, அகத்திக்கீரையோ, பிற தீவனமோ கொடுக்க வேண்டும்.
குலம் காக்கும் கோமாதா பூஜை!
நாள்தோறும் பசுவை பூஜிப்பது சிறப்பு. இல்லையெனில், வெள்ளிக் கிழமை மட்டுமாவது பசுவை பூஜிக்க வேண்டும். இதனால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம். அதனால், அகிலத்துக்கே நன்மை கிடைக்கும்.
ஒருவருக்குத் தீய கனவுகள் அடிக்கடி வந்து அவஸ்தைப்பட்டால் அதற்குப் பரிகாரம், காலையில் பசுவின் தொழுவத்துக்குச் சென்று வாழைப்பழம் கொடுத்து வழிபட்டால் சுகம் கிடைக்கும். கன்று ஈன்ற பசுக்களுக்குத் தொடர்ந்து புல், பிண்ணாக்கு, தானியம் போன்றவற்றை அளித்து காலையில் வணங்கிவந்தால் கொடுத்த கடன் பிரச்னையின்றித் திரும்பக் கிடைக்கும்.
பலவித கிரக கோளாறுகளால் பீடிக்கப்பட்டவர்களும் தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்களும் தங்கள் பீடைகளிலிருந்து விடுபடுவதற்கு கோதானம் என்னும் பசுதானம் செய்து வழிபட்டால் நலம் பெறலாம். புண்ணிய நதிகள், சமுத்திரங்கள் பசுவின் உடலில் இருப்பதால் பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வலம் வந்து வணங்கிய பலன் கிடைக்கும்.
கோதானத்தைவிடச் சிறந்த தானம் எதுவும் கிடையாது. எனவேதான் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் கோதானம் செய்வதை நம் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. கோதானம் கொடுக்கும்போது பசுவின் வாலை உருவியே தானம் கொடுக்க வேண்டும். வாழ்வில் சிக்கல் நிம்மதி இல்லாதவர்கள் ஐந்து முறை கோபூஜை செய்து அதற்கு உணவு தர துன்பமும் விலகி இன்பம் பிறக்கும். இங்ஙனம் பசுவை பற்றிய அபூர்வத் தகவல்கள் நம் புராணங்களிலும் திருக்கதைகளிலும் நிறைய உண்டு.
பசுவைப் பேணுவது சகல ஜீவன்களிடத்தும் நாம் கடைப்பிடிக்கவேண்டிய கருணைக்கான அடையாளம் என்பார்கள் ஞானிகள். `யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை’ என்பது திருமூலரின் வாக்கு. பசுவை பூஜித்த இறைவன் என்பதால், சிவனை 'பசுபதீஸ்வரர்' என்று சொல்வார்கள்.
தமிழகத்தில் பல கோயில்களில் வாகனமாக நந்தி இருக்கும். இந்நிலையில், தமிழகத்திலே முதல்முறையாக கோவை பீளமேடு புதூர் அருள்மிகு மாரியம்மன் பாலமுருகன் கோயிலில் நந்தினி உடன் உறை கோமாதா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகால பழைமை வாய்ந்த பீளமேடு புதூர் மாரியம்மன் கோயிலில் மூலவராக மாரியம்மன் இருக்கிறார்.
இதுதவிர, பாலமுருகன், வலம்புரி விநாயகர், கன்னிமார், கருப்பராயர் இருக்கின்றனர். தற்போது மக்களுக்கு பசுவின் முக்கியத்துவம் குறித்துத் தெரிய வேண்டும் என்பதால் ஆறு அடி உயரத்துக்கு கோமாதா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பீளமேடு புதூர் மாரியம்மன் கோயில் அறங்காவலர்கள், “மாரியம்மன் பொதுவாக கிழக்கு பார்த்துதான் இருப்பார்கள். இங்கு வடக்கு திசை பார்த்த மாரியம்மன் இருக்கிறார். கோயில் நுழைவுக்கு முன்பு கருங்கல்லில் கற்பக மரத்துக்கு கீழே வலம்புரி விநாயகர் இருக்கிறார். பிள்ளையார்பட்டிக்கு அடுத்து இந்த முறையில் விநாயகர் இருப்பது இங்குதான். மாடுதான் நம் கலாசாரத்தின் அடிநாதம்.
பசு என்பதை நம் சமயத்தில் கடவுள் என்பதை மறந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த சூழ்நிலை மாறி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் அனுக்கிரகத்தில் இந்த முயற்சியைச் செய்துள்ளோம்.
ஜெயின் கோயில்களில் கோமாதாவுக்கு விக்கிரகம் இருக்கும். ஒருமுறை நாங்கள் ஆந்திரா சென்றபோது, அங்கு கோமாதாவுக்கு சிறிய அளவிலான விக்கிரகத்தை பார்த்தோம். இங்கு பெரிய விக்கிரகம் அமைத்துள்ளோம். கோமாதா விக்கிரகம் இருப்பதால், இங்கு அனைத்து விதமான ஹோமங்களும் செய்ய முடியும். நம்முடைய வீட்டிலோ, கோயில்களுக்கோ சென்று கோ பூஜை செய்தால் சகல சௌபாக்கியங்களும் உருவாகும்.
பசுவின் உடம்பில் அனைத்து விதமான தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும், நவகிரகங்களும் குடியிருப்பதால், கோபூஜை செய்யும் பொழுது அனைவருடைய பரிபூரணமான அருளும் நமக்கும் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன” என்றனர்.
இந்த கோயில் காலை 6-11.30, மாலை 5.30 - 8.30 மணி வரை திறந்திருக்கும். கோவை அவிநாசி சாலை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரிப் பேருந்து நிறுத்தம், தெற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு மிக அருகில் கோயில் உள்ளது.