Breaking News :

Friday, May 02
.

பணக்காரரை திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு முகேஷ் அம்பானி பதில்?


பூஜா என்ற  இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார்.

இந்தப்  பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில்....

“உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான்.

ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும். பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும்.

பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார்.

வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார். எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்” என்றார்.

குறிப்பு:  பணத்திற்காக மணந்தவர்கள் ஏராளம்...
குணத்திற்காக மணந்தவர்கள் சிலரே.... எல்லா பெண்களும் இப்புடி அல்ல ஆனால் சில பெண்கள் வசதியான  பணம் மட்டுமே தகுதி என நினைத்து திருமணம் செய்ய விரும்புவது தவறாகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.