"காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது" என்ற பழமொழியின் பொருள் இதோ...
பொதுவாக பாம்புகள் தம்மை எவராவது காலால் மிதித்தால், மிதித்த கால்களைச் சுற்றிக் கொள்ளும் சுபாவமுடையவை.
உதறவும் முடியாது, அடிக்கவும் முடியாது. ஆனால் எப்படியோ பாம்பை விரட்டியாக வேண்டும். ஆனால் அதற்குள் கடிபடும் வாய்ப்பு அதிகம். இப்படித்தான் சில கெட்ட மனிதர்களின் சகவாசங்களும் அமைந்து விடுகின்றன.
எட்ட இருக்கும்வரை நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் . தோளில் கைபோட்டு பழகுமளவிற்குச் சென்ற பின்னர், இந்த வேண்டாத நட்பை உதறுவது, சுலபமான காரியமல்ல. ஏதோவொரு வழியில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்தான் இந்த நட்பு முடியும். வந்தபின் காப்பதை விட, வருமுன் காப்பதே மேல்.