Breaking News :

Saturday, May 03
.

புனுகுப் பூனை அறிவியல் தகவல்கள்


உலகில், சாதாரணமான காப்பி விதையினை விடவும் நல்ல காப்பி விதைதான் அதிக விலையானது. நல்ல காப்பி விதையை எப்படி கண்டுபிடிக்கின்றார்கள்.?

புனுகுப்பூனை என்ற ஒருவகைப் பூனை காப்பித்  தோட்டத்தில்தான் இருக்கும். புனுகுப் பூனை சாப்பிட்டு எச்சமாகப் போட்ட காப்பி விதைதான் நல்ல காப்பிக் விதையாம். ஏனென்றால் இருப்பதிலேயே நல்ல காப்பி பழத்தைத்தான் புனுகுப் பூனை சாப்பிடுமாம்.

அதிகளவில் இந்தோனேசிய நாட்டில்தான் இந்தவகையான "கொபி லுவக்" காப்பி விதைகள் கிடைக்கின்றதாம்.

குளவிகளில் ஒருவகை உண்டு. இது பூமியில் துளையிட்டு முட்டைகளை இடுகின்றது. பிறகு ஒரு வெட்டுக்கிளியை தேடிப்பிடிக்கின்றது. அதனைக் கொல்லாமல் வகையான இடத்தில் கொட்டி சுயநினைவை இழக்கச்செய்கிறது.

அதனைத் தனது துளைக்குள் கொண்டு வந்து போட்டுத் துளையை அடைத்து விடுகிறது. உள்ளே இருக்கும் முட்டைகள் பொரித்து குளவிக்குஞ்சுகள் வெளி வருகின்றன. அவை உரிய பருவமடைந்து வெளியேறும்வரை உண்ண உணவு வேண்டும். அதற்காக இந்த வெட்டுக்கிளி பயன்படுகின்றது.

இறந்த பிராணிகளின் மாமிசம் உதவாது. அப்படிப்பட்ட மாமிசத்தைத் தின்றால் இளம் குளவிக்குஞ்சுகள் இறந்துவிடும். அதனால்தான் வெட்டுக்கிளியை உயிரிழக்காமல் உணர்வை மட்டும் இழக்கச்செய்கிறது தாய்க்குளவி.

சில உயிரினங்கள் தங்களுடைய இனத்தைப் பெருக்க தன்னையே அழித்துக்கொள்கின்றன.

குஞ்சுகள் பொரித்த உடனே நண்டு இறந்துவிடும். நண்டின் வயிற்றுப்பகுதி வெடித்துதான் அதன் குஞ்சுகள் வெளிவருகின்றன.

மூங்கில் அதன் அருகில் வேறொரு மூங்கில் வளர முளை விடத் தொடங்கியதும் தாய் மூங்கில் பழுத்துப் பட்டுப் போய்விடும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub