உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பி்ஸ்ராக் என்னும் ஊரில் விஸ்வாரா என்னும் முனிவருக்கும் கைகேசி என்கிற நாகர் குல பெண்ணுக்கும் பிறந்தவர்தான் சிவதாசன் என்கிற ராவணன்.
ராவணன் ஒரே நேரத்தில் பத்து செயல்களை செய்யக் கூடிய ஆற்றல் பெற்றவர் அதுமட்டுமல்லாமல் வீனை, வானியல், வேதம், சிவபக்தி, போர், மருத்துவம், கவிதை போன்ற பத்து துறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். அதனால் அவரை பத்து துறை இராவணன் என்று கூறுவர். பிற்காலத்தில் இது பத்துத்தலை இராவணன் என மாறிற்று.
இரண்டாம் கடல் கோள்களுக்கு பிறகு இந்தியாவும் இலங்கையும் கடல்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது இலங்கையை ஆண்டது ராவணனின் அண்ணன் குபேரன். அவருக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தவர் தான் ராவணன். ராவணனின் ஆட்சி இலங்கையின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது.
ராவணன் இசைக் கருவியை இசைப்பது மட்டுமல்லாமல் அந்த கருவிகளை செய்யவும் வல்லவர். பருவகாலத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வாசிக்கக்கூடிய இசை வாத்தியங்களையும், போர்க்காலத்தில் வாசிக்கக்கூடிய இசை வாத்தியங்களையும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்.
வீணை வாசிப்பதில் அதீத ஆர்வமுள்ள ராவணன் தன் தொடை நரம்புகளால் சாமதானம் வாசித்து சிவனை குளிர் வித்தார். முதன்முதலில் போர்க்களத்தில் நல்ல பாம்பின் விஷத்தை வெடிகுண்டுகளாக பயன்படுத்தியதும் ராவணன்தான். போர்க்களத்தில் காயமடையும் தன் படைகளுக்கு மருத்துவம் செய்வதற்கு, மருத்துவம் பயின்றது மட்டுமல்லாமல் நாளடைவில் மருத்துவத்தைப் பற்றி 27 நூல்களை எழுதும் அளவிற்கு வல்லவர் ஆனார். முதன்முதலில் தன் படைகளத்திற்கு தலைக்கவசமும், போர்க்கவசமும் அணிய செய்ததும் ராவணனே.