வயசு ஒன்னும்
பெருசா ஆகல அவளுக்கு
அப்பதான் பத்து ஆனது..
அந்த காலத்துல
அவங்க ஆயா வயசுக்கு வர
பதினெட்டு வயசாச்சாம்..
அது அவங்க
தாத்தாட்ட பாட்டி
பேசும் போதுதான் எங்களுக்கே
தெரியும்..
என்ன ஆச்சர்யம்...
பள்ளிக்கூடத்துக்கு கூட
தனியாத்தான் அனுப்புவாங்க...
முறையில
அவ எனக்கு அத்தை பொண்ணு...
அதுவரைக்கும் எனக்கு
ஒண்ணும் தோணல அவ மேல...
வயசும் அதிகமாச்சு...
விவரம்
கொஞ்சம் கொஞ்சமாத்தான்
தெரிய வந்தது....
ஒரு சின்ன ஆசை...
இனிமே காலம் முழுக்க
அவ கையால சாப்பிடணும்னு...
இது தப்பில்லேன்னு தோணு.ச்சி..
ஒரு நாள் அவகிட்ட
நேரடியாவே கேட்டுட்டேன்...
"நீ சமைச்ச மண் சோறும்
அந்த தண்ணிக் குழம்பும்
இனி எப்ப கிடைக்கும்"னு..
அதுக்கு அவ சொன்ன
பதில்...
ஒரு சின்ன
வெக்கம் கலந்த சிரிப்புமட்டும்தான்...
அப்புறம்
"போடா"ன்னு சொல்லிட்டு
ஓடி போய்ட்டா...
அவள பார்த்துகிட்டே
இருந்த எனக்கு
அவள பார்க்காம
இருக்கவே முடியல...
'உன்னய பார்க்காம
இருக்க முடியாத
மாதிரி தெரியுது...'
அவள்ட்ட சொன்னன்...
கொஞ்சங்கூட
யோசிக்காத அவ சொன்னா...
'எனக்கும்தான்டா...'
அப்றமா
ஏதேதோ காரணம் சொல்லி
அடிக்கடி பார்த்து கிட்டோம்...
இதைலாம்
வீட்ல பார்க்காமலா
இருப்பாங்க...
கோவப்படல...
ஆனா...
சேர்த்து வைக்க
முடிவு பண்ணினாங்க...
ஆனா...
நான் என்ன பாவம்
செஞ்சேன்னே தெரியல...
அன்னைக்கு நான் சொன்னதுனால
இன்னைக்கு வரைக்கும் மனுசி
என்ன சமைச்சாலும்..
சோறு மண்ணு மாதிரிதான் இருக்கு..
குழம்பு தண்ணியாத்தான் இருக்கு...
'ஏன்டி'ன்னு கேட்டா...
அன்னிக்கி
இனிச்சதுல்ல,
இப்ப கசக்குதா'ன்னு
கேட்குறமாரி மொறைக்கிறா...