எல்லா நாளும் சூடும் மல்லிப்பூ
திருநாளில் கூட அவள் கூந்தல்
ஏற இயலாமல் தவித்தது..
அவள் நினைவில் அதன் வாசமும் நினைவிழந்து போனதை யோசிக்கும் மனநிலையில்.. இல்லையென்பதை
புரிந்து ஒதுக்குப்புற விற்றலில்
தினம் காணாமல் போனது மெல்லிய வாசமிழந்தே.
.
பகலெல்லாம் கொள்ளிக் கண்களில்
தப்பித்தும் தவிர்த்தும்
தகித்தும் அயர்ந்து போகிறாளென
தனித்திருக்கும் தேவதை கதைகளில்
பெண்மையின் வலிகளை
சொல்ல மறந்து போவதை பொருட்படுத்துவதில்லை..சமூகமும்
இவளுமே..
..
இரவின் யாகத்தில் விழிகள் எரிந்துக் கொண்டிருக்கும் தூங்கா விளக்காக..
போலியாக பகலெல்லாம் புன்னகை வீசிய இதழ்கள் மெய்யாக மெய்யுருகுவதில்
வறண்டு போவதை தடுப்பதற்கில்லை
அவளின் மனக்கிலேசங்களால்..
அர்த்தமற்று கழியும் இரவுகளுக்கு ஆயிரமாயிரம் வியாக்கியானம் சொல்லிக் கொள்வாள்.. சமாதான போர்வையில்..
..
ஆமைக்கு பழகிப்போனது.. ஆமையாக வாழ
சுருட்டிக் கொள்ள பழக முரண்டு பிடித்தது..காதல் மனம்..
நனைந்த தலையணைகள் அவளின் ஈர பிசுபிசுப்பில் இன்னும் வாஞ்சையானது
நெருங்கி ஆறுதலாக..
அவளின் அவனை விட கூடுதலாகவே..
..
புரிதல் அழகு தான் எதிலும் எவரிலும்..
..
..
இது எதற்கும் சம்மந்தம் தானில்லையென்றே
இன்னொருத்தியின் மடியில் நீ தான் என் உயிரென.. காலமெல்லாம் உனக்காக வாழ்வேன்..தன்னிடம் பேசியதை விட கொஞ்சம் குறைவாகவே பேசி
நீயில்லாது போனால் செத்துப் போவேனென
காதல் வசனங்களில் அவளை உருக்கி
தன்னுயிரை அவளுள் வார்த்து அவள் அணைப்பில் இரவை இன்பமாய் மோட்சமடைய செய்த முன்னால் கணவன்
முப்பொழுதும் மறக்கமுடியா காதலனாய்
இப்பொழுதும் இம்சிக்கிறான்..நினைவிலிருந்து விலகமறுத்து..அதில்
தன்மீதே வெறுப்பை உமிழ்ந்து தோற்றுப் போனாள்..
..
வெட்கங்கெட்ட காதலுக்கு.. விளங்காத திருமண வாழ்விற்கு கானல் கனவில்
வெள்ளி உலா
எதற்கென கேள்வியில்..
பதில் தெரியாமலே தொலைந்தும் போனாள்
..
பதிவிரதை என்றபெயர் மட்டும் ஊர்மெச்ச!!
.
விட்டில் பூச்சி வாழ்க்கை (பதிவிரதை)
.