நான் ஒரு பெண் என்பது
யாருக்கும் தெரிய வேண்டாம்..
நாள் கிழமை தேதி
நட்சத்திரம் அறிய வேண்டாம்..
நான்காண்டு கற்கண்டு என் உதடு ருசிக்க வேண்டாம்..என்
நாவடக்கம் ஆண்மையில்லை
நல்ல கணவன் எனக்கு வேண்டாம்...
இப்போதும்
இரக்கம் காட்டுவது போல் சிலர் இடைவெளி தேடலாம்...
இருதய நாளங்களில் இடம் கேட்டு உள்ளே வரலாம்
இத்தனை நாள் இல்லாத என்னழகை
இரு வரியில் பாராட்டி கவி வரைய காத்திருக்கலாம்...
இந்த இரவுபோதை தீரும் வரை
இருகை பிடித்து உடன் வரலாம்..
நாளை
நான் உடையற்று நடுத்தெருவில் வீழ்ந்து கிடக்கும் போது
நடக்கும் நாய்களுக்கு உணவாகத் தெரியும்..
ஏதோ ஒரு மீசையுள்ள ஆண்மைக்கு என் அவலநிலை புரியும்..
அப்போது பார்க்கலாம்...
காலையில்
கத்தியில் இரத்தக்கறை காரணகாரியம் புரியும்..சமையத்தில்
காமமில்லா காதல் கையில் பிள்ளை
எப்படி வர முடியும்..
இருளில்
கால் நடுவே இரத்தக்கறை காமம் எப்படிப் புணரும்
காதலித்த கணவனுக்கு காமமும் காதலும் புரியும்...
என்னை வாழ்வில்
கத்தியின்றி கட்டிப் போட
கழுத்து முடிச்சிடும் மஞ்சள் கயிறோ..
காதலில்லா காமத்துக்கு
கல்யாணமும் ஒரு சடங்கு மயிரோ.....
எதிர்த்து பேசும் பேச்சு இல்லை
எதிர்மறை இது வழக்கம்..
ஏனாம் ஆணும் பெண்ணும்
சமமில்லை..
தாலி எனக்கு மட்டும்தான் தொங்கணுமாம்.....அது தானோ
ஆண்களின் சமநீதி பழக்கம்...
இப்போதும் சொல்லாதீர்கள்
நான் பெண் என்பது யாருக்கும்
தெரிய வேண்டாம்..
தேவை மட்டுமே தேடல் என்று
என் பின்னே அலைய வேண்டாம்...
..இயலிசம்..
.
காமமும் காதலும் புரியும்...
.