ஆயிரம் கவலைகள்
என்னை ஆக்கிரமித்து கொண்டாலும்
ஆசை முகம் உன்னை கண்டவுடன்
ஆனந்த தாண்டவம் ஆடுதடி
கண்ணக்குழிக்குள்
வைத்து
அன்னம் ஊட்டி
அன்பு கவிதைகள் பாட நினைக்குதடி
என் புன்சிரிப்பில் மலர்ந்து
புதுக்கவிதை எழுதி
பொதிகை தமிழ் பாடி
உன்னை அழைக்குதடி
கூர் நாசி மூச்சு காற்றில்
ஏர் பூட்டி உழுது
காதல் பயிர் விதைக்கிறாய்
இதயத்தில் வளர்ந்த காதலை
இன்பமாக வந்து அறுவடை செய்கிறாய்
.
உன் கண்ணக்குழிக்குள்ளே..

.