Breaking News :

Thursday, May 01
.

பெண்களை பற்றி பெண்களுக்கே தெரியாத விஷயங்கள்?


மனித இனம் மட்டுமின்றி, உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களிலும் விருட்சமாக இருந்து வருவது பெண் பாலினம். பெண் பாலினம் இன்றி ஓர் இனத்தின் விருத்தி சாத்தியமற்றது. அனைத்து உயிரினங்களின் அடிப்படையும் இனவிருத்தி தான். ஆனால், மனித இனத்தில் மட்டுமே அதையும் தாண்டிய அன்பும், பாசத்திற்குமான அடையாளமாய் இருக்கிறார்கள் பெண்கள்.

பாசத்திற்கான அடைமொழியாக திகழ்வது “அம்மா” என்ற சொல் மட்டுமே. ஒவ்வொரு ஆணின் வெற்றி, தோல்வி, இன்ப, துன்பங்களுக்கு பின்னணியில் உறுதுணையாக, அம்மா, அக்கா, மனைவி, காதலி, தோழி என்ற ஒரு பெண்ணின் துணை இருக்கத்தான் செய்கிறது. ஆண்களின் பலத்திற்கு உறுதுணையாக இருக்கும் பெண்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த பல விஷயங்கள் பெண்களுக்கே தெரியாது என்பது தான் ஆச்சரியப்பட வைக்கும் உண்மை.

பிரசவ  இறப்பு:

பிரசவம் அல்லது குழந்தை பேறு நடக்கும் சமயத்தில் ஒவ்வொரு 90 நொடியிலும் ஓர் பெண் இறக்கிறாள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் உண்மை.

பெண்கள் அதிகமுள்ள நாடு:

ரஷ்யாவில் ஆண்களை விட பெண்கள் அதிகம். ஏறத்தாழ 9 மில்லியன் பெண்கள், ஆண்களை விட அதிகமாக இருக்கிறார்கள்.

திருமணம் ஆகாமல் குழந்தை:

அமெரிக்காவில் பிறக்கும் 40% குழந்தைகள் திருமணம் ஆகாதவர்களுக்கு பிறக்கும் குழந்தை என ஓர் சர்வே கணக்கு கூறுகிறது.

சராசரியாக பெண்கள், தங்களது வாழ்நாளில் ஒரு வருடத்தை, என்ன துணி அணியலாம் என்ற சிந்தனையிலும், துணியை தேர்ந்தெடுப்பதிலும் செலவழிக்கின்றனர்.

சராசரியாக அழுவது;

ஓர் பெண் ஒரு வருடத்தில் சராசரியாக 30-64 முறை அழுகிறாள். ஓர் ஆண், சராசரியாக ஓர் வருடத்திற்கு 6-17 முறை அழுகிறான்.

பொய்;
ஆண்களை விட இரு மடங்கு அதிகமாக பொய் கூறும் திறன் கொண்டவர்கள் பெண்கள்.

இதயத் துடிப்பு;

ஆண்களின் இதயத்துடிப்பை விட வேகமாக பெண்களின் இதயம் துடிக்கிறது. இது பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

மாதவிடாய்:

பெண்களின் வாழ்நாளில் ஏறத்தாழ நான்கு வருடங்கள் மாதவிடாயில் கழிகிறது.

ருசி அதிகம்:

ஆண்களை விட ருசி உணர்வு அதிகம் கொண்டவர்கள் பெண்கள். ஏனெனில், ஆண்களை விட அதிகமான ருசி உணர்வு மொட்டுகள் பெண்களின் நாக்கில் இருக்கிறது.

தோற்றத்தை பற்றிய எண்ணம்:

ஓர் பெண் சராசரியாக ஓர் நாளுக்கு நான்கில் இருந்து ஒன்பது முறை தங்களது தோற்றத்தைப் பற்றி எண்ணுகிறார்கள்.

பெண்களை கொல்லும் நோய்:

பெண்களை கொல்லும் கொடிய நோயாக இருப்பது இதய பிரச்சனைகள் தான். உலகெங்கிலும் பெண்கள் அதிகமாக மரணமடைய இதய கோளாறுகள் தான் காரணமாக இருக்கிறது.

மல்டி டாஸ்கிங் திறனில் ஆண்களை விட திறன் வாய்ந்தவர்கள் பெண்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.