Breaking News :

Thursday, December 26
.

கெஜ்ரிவால் கைது: ஜனநாயகப் படுகொலை : கு. செல்வப் பெருந்தகை


டெல்லி மாநில முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதை விட ஒரு ஜனநாயகப் படுகொலை எதுவும் இருக்க முடியாது. 

 

ஏற்கனவே ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். 

 

அதன் மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று சதித் திட்டம் தீட்டியது பா.ஜ.க. ஆனால் மீண்டும் அங்கே ஆட்சி காப்பாற்றப் பட்டிருக்கிறது. 

 

அதை போலவே டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்ப்பதற்கு தேர்தல் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செயப்பட்டிருக்கிறார். 

 

ஏற்கனவே ஆம் ஆத்மி  அமைச்சர் திரு மணீஷ் சிசோடியா சிறையில் இருக்கிறார். 

 

அமலாக்கத் துறையின் இத்தகைய அடக்குமுறைகளை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K. செல்வப் பெருந்தகை M.L.A.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.