Breaking News :

Thursday, December 26
.

மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் நிறைவு: பிரதமர் மோடி புகழாரம்


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெற்றதை முன்னிட்டு மாநிலங்களவையில் பிரிவுபசார உரையில் பிரதமர் மோடி பேசியதாவது: மன்மோகன் சிங்கின் பணிகளை இன்று நினைவுகூர விரும்புகிறேன். அவரது பங்களிப்பு அளப்பரியது. நீண்ட காலம், இந்த அவையையும், நாட்டையும் அவர் வழிநடத்திய விதம் மறக்க முடியாது. அவர் நம்மை தொடர்ந்து வழிநடத்த பிரார்த்தனை செய்கிறேன்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர் மன்மோகன் சிங். நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பு ஒன்றில், ஆட்சியாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிந்தும், மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். ஒரு உறுப்பினர் தனது கடமையை எப்போதும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்பவர்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். தனது கடமைகளை சிறப்புற நிறைவேற்றியவர். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது. நமது நாட்டின் ஜனநாயகம் குறித்த பேச்சு எங்கெல்லாம் எழுகிறதோ அங்கெல்லாம், நினைவுகூறப்படும் உயர்ந்த மனிதர்களில் ஒருவராக அவர் இருப்பார்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.