அக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில், பல்வேறு உதவிகளை செய்த இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு, ஐ.நா.வின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கத் தவறியதால் 32 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று மேலும் 18.317 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அங்கு கொரோனாவால் 481 பேர் உயிரிழந்துள்ளனர்.