Breaking News :

Tuesday, April 15
.

கூகுளில் தேட கூடாதது என்ன?


நம் வங்கியின் இணைய வலைத்தள முகவரி. நம் வங்கியின் இணைய வலைத்தள முகவரி துல்லியமாக நமக்குத் தெரிந்திருந்தால், நேரடியாக நாம் அதை உள்ளீடு செய்து பயன்படுத்தலாம். மாறாக கூகுளில் தேடினால், அது phishing - தமிழ் விக்சனரி வழிவகை செய்கிறது. அதாவது, ஒரு சட்டப்படியான நிறுவனத்தின் மின்னஞ்சலாகத் தன்னை முன்நிறுத்தி, அந்நிறுவன நுகர்வோரின் இரகசியத் தகவல்களை ஏமாற்றிப் பெறும் மோசடி மின்னஞ்சல். வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்கள், கடவுச் சொற்கள், கடனட்டையின் விவரங்கள் போன்றவைகளை ஏமாற்றிப் பெற இது பயன்படுத்தப்படுகின்றன.

எந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை தொலைபேசி எண்களையும் தேடக்கூடாது. போலியான வாடிக்கையாளர் சேவை தொலைபேசி எண்கள் பல இணையத்தில் உலா வருகின்றன. இது ஒரு சிறந்த உதாரணம், இணையதளம் மூலம் நூதன பண மோசடி: போலி நபர்களிடம் தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம்மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை

திறன்பேசி செயலிகளை, கூகுளில் தேடுவதை தவிர்க்க வேண்டும். கூகுளின் அதிகாரபூர்வ, செயலிகளுக்கு என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஏனென்றால் போலியான செயலிகளை நாம் பதிவிறக்கம் செய்தால், malware தீங்குநிரலால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

கூகுளில் சுயமருத்துவம் செய்வதற்காக மருந்துகளை பற்றி தேடுவதோ அல்லது வியாதியைப் பற்றி அறிந்து கொள்வதோ தவிர்க்க பட வேண்டும். உரிய மருத்துவரை ஆலோசித்து மருத்துவம் செய்யவேண்டும்.

பொதுவாக, எடை குறைப்பு, உணவு கட்டுப்பாடு மற்றும் மருத்துவம் தொடர்பான தகவல்களை கூகுளில் தேடி தெரிந்து கொள்ளாமல் உரிய துறை சார்ந்த வல்லுநர் மற்றும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

நிதி ஆலோசனை மற்றும் பங்கு சந்தையில் முதலீடு தொடர்பான தகவல்களை கூகுளில் தேடுவதை தவிர்க்க வேண்டும். இத்தகைய ஆலோசனைகளை பின்பற்றி அதன் மூலமாக உலகத்திலுள்ள அனைவரும் பணக்காரராக உருவாகி விட முடியாது.

அரசாங்க இணையதள முகவரிகளை துல்லியமாக தெரிந்தால் நேரடியாக உள்ளீடு செய்யலாம். மாநகராட்சி வரி கட்ட மேலும் அரசாங்க மருத்துவமனை போன்ற இணைய தள முகவரியை கூகுளில் தேடுவதை தவிர்க்க வேண்டும். இணைய வங்கி மோசடியை போல இங்கேயும் மோசடிகள் நடப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் உள்நுழைய அந்த குறிப்பிட்ட வலைதளங்களின் அதிகாரப்பூர்வ முகவரியில் சென்று உள் நுழைந்தால் பாதுகாப்பானது. மாறாக கூகுளில் அந்த குறிப்பிட்ட சமூக வலைதளங்களை தேடி அதன் மூலமாக உள்நுழைந்தால், [ login ] malware தீங்குநிரலால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

தற்சமயம் மிகவும் பிரபலமாக இருக்கும் இணையதள நேரடி வர்த்தக தளங்களில், தள்ளுபடி தொடர்பாக கூகுளில் தேடுவதை தவிர்க்க வேண்டும். கிட்டத்தட்ட போலியாக பிரபல இணையதள வர்த்தக நிறுவனங்களைப் போலவே செயல்பட்டு பெருமளவில் மோசடி நடந்து வருகிறது.

நச்சுநிரல் [ Virus ] தொடர்பான மென்பொருள் அல்லது நச்சுநிரல் தடுக்கும் செயலிகளை [ Anti Virus Apps ] கூகுளில் தேடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் போலியான மென்பொருள் மற்றும் செயலிகள் பல இணையத்தில் உலா வருகின்றன.

இணைய வர்த்தகத்தில் பொருட்கள் வாங்குவதற்கு தள்ளுபடி சீட்டு / சலுகை சீட்டு [ discount coupon ] தேடுவதை தவிர்க்க வேண்டும். நேரடியாக உங்களுக்கு சலுகை ஏதாவது கிடைத்திருந்தால் அதை பயன்படுத்தலாம். மாறாக கூகுளில் தேடினால் போலியான நபர்களிடம் நாம் ஏமாற வேண்டி இருக்கும்.

கூகுள் விளம்பரம் எப்படி வேலை செய்கிறது என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆகையால் ஆபாச வலைதளங்கள் மற்றும் அது போன்ற வலைதளங்களை தேடினால் தேவையின்றி, அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுதோ அல்லது பிற இடங்களில் அனைவருக்கும் தெரியும்படி நாம் முன்னர் தேடியது தொடர்பாக தகவல்கள் வந்து, அனைவரும் முன்னிலையிலும் அவமானம் அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

தகவல்கள் அனைத்தும் நன்றி : Why you should not search for these 12 things on Google | Gadgets Now

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.